நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் இருந்த கிளிகள் பறிமுதல்
நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த இரு கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டன.;
ரோபோ சங்கர் (பைல் படம்)
சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த இரு அலெக்சாண்டரியன் பச்சை கிளிகளை கிண்டி வனத் துறையினர் பறிமுதல் செய்தனர். கிளிகள் கிண்டியில் உள்ள நேசனல் சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.
இதுதொடர்பாக ரோபோ சங்கரிடம் வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் தற்போது குடும்பத்துடன் ஸ்ரீலங்கா சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னை வந்தவுடன் தான் முழு தகவலை அளிப்பதாகக் கூறியுள்ளார். இந்நிலையில், தன்னிடம் இருப்பது ஆஸ்திரேலியா கிளிகள் அல்ல, நாட்டு கிளிகள் தான் எனத் தெரிவித்துள்ளார்.