கதிர், கண்ணனை நினைத்து தன் இயலாமையை நினைக்கும் ஜீவா!
அத்தோடு விடாமல் அடுத்த மாசம் நானும் ஐஸுக்கு ரிங் வாங்கி கொடுக்க போகிறேன் என்று கூறியதும் தன் இயலாமையைப் பற்றி கவலை கொள்கிறான் ஜீவா.
இந்த வாரம்
காலையிலேயே வெளியில் சென்று திரும்பி வந்த ஜீவாவை வரவேற்று உட்காரச் சொல்கிறான் கதிர். அண்ணே வா.. காலைலயே எங்க போயிட்டு வர என்று கேட்கிறான். அதற்கு ஜீவா, மீனா கறி வாங்கிட்டு வரச் சொன்னாடா அதான் போயிட்டு வரேன் என்று பதில் சொல்கிறான் ஜீவா.
அந்த நேரத்தில் வாயைத் திறக்கும் கண்ணன், அண்ணே நீ கறி வாங்க போன நேரத்துல இங்க ஒரு ரொமான்ஸ் நடந்துது நீ அத மிஸ் பண்ணிட்ட என்று கூறுகிறான்.
இதனைக் கேட்டதும் முல்லை டேய் கண்ணா சும்மா இருடா... ஆள பாரு.. அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா என வெட்கப்பட்டுக்கொண்டே உள்ளே எழுந்து செல்கிறாள் முல்லை.
அண்ணே.... அண்ணன் அண்ணிக்கு ஒரு ஜிமிக்கி வாங்கி குடுத்துருக்கு என ஜீவாவைப் பார்த்து சொல்கிறான் கண்ணன். இததான் அவன் ரொமான்ஸ்ங்குறான் என கதிர், ஜீவாவிடம் சொல்கிறான். ஜிமிக்கின்னா சும்மா ஜிமிக்கி இல்லன்னே திருச்சிக்கு போயி 2800 ரூபாய்க்கு டூபிளிகேட் ஜிமிக்கி வாங்கி கொடுத்துருக்கு என்று அவன் கூறுகிறான்
அதற்கு கதிர், என்னடா அது டூப்ளிகேட்டு.. என்று கேட்க கண்ணனோ அதுதான் தங்கம் இல்லைல அப்றம் என்ன என்று கூறுகிறான். இல்லத்தான் அதுக்கு என்ன என்று ஆரம்பிக்கும் கதிர், அவளுக்காக சேர்த்து வச்சி வாங்கியிருப்பதை கூறினான்.
முன்னதாக, ஜீவாவோ கதிரிடம் இவ்ளோ பணம் இருக்காது என நினைத்திருந்தான். அந்த நேரத்தில் கண்ணன் என்ன அண்ணே இப்படி சொல்லிட்ட.... கதிர் அண்ணன் இப்ப ஹோட்டல் ஓனரு.. அத பாத்து இப்படி சொல்லிட்டு இருக்க என்றது ஜீவாவின் முகத்தில் சோகம் எட்டி பார்க்கிறது.
அத்தோடு விடாமல் அடுத்த மாசம் நானும் ஐஸுக்கு ரிங் வாங்கி கொடுக்க போகிறேன் என்று கூறியதும் தன் இயலாமையைப் பற்றி கவலை கொள்கிறான் ஜீவா.
போன வாரம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடை ஆர்டர் வாங்க செல்ல ஆட்டோ ஃப்ரீயாக இருக்கிறதா என்று கேட்கிறான் ஆனால் ஆட்டோ இல்லாததால் அவனை காரில் செல்ல சொல்கிறான் மூர்த்தி. வீட்டுக்காக வாங்குன கார் தான நீ எடுத்துட்டு போ என்று சொல்கிறான் மூர்த்தி கதிர் காரில் செல்லும்போது வழியில் மீனாவின் அப்பா ஜனார்த்தனன் அவனை பார்க்கிறான். அவன் தன்னிடம் வேலை பார்ப்பவனிடம் இப்படி புலம்புகிறான். ஹோட்டல் வச்சிருக்காரு அதான் கார்ல போறாரு என்கிறான்.
அடுத்ததாக கண்ணன் ஆஃபீஸ் போக பைக்கில் கிளம்புகிறான். பாரு கவர்ண்மெண்ட் வேலை பாக்குறாரு அதான் பைக்ல போறாரு என கிண்டல் அடிக்கிறான். பின்னாடி ஜீவா டிவிஎஸ்ஸில் செல்கிறான். இதனை பார்த்தும் கோபப்படுகிறான் ஜனார்த்தனன். அவரு இங்க வந்துருக்கலனாலும் பரவால. அட்லீஸ்ட் அங்க அவர் வீட்ல மரியாதையா நடத்துறாங்களா பாருங்க என்று ஆதங்கப்படுகிறான்.
கடையில் ஜீவா ஒற்றையாளாக டெலிவரி வேலையையும் பார்த்துக்கொண்டு கடையையும் பார்த்துக் கொண்டு நிற்கிறான். மூர்த்தியோ ஹோட்டலில் கதிர் கஷ்டப்படுவான் நான் போயி பாத்துட்டு வரேன்னு போறான் என ஆதங்கப்படுகிறார் மாமா.
அடுத்த காட்சியில் மீனா, ஜீவா அவர்களுடன் கண்ணன் காரில் ரவுண்டு செல்கிறார்கள். போய்க்கொண்டிருக்கும் வேளையில் பைக் காரன் ஒருவன் வந்து இடித்து ஸ்க்ராட்ச் செய்துவிட என்ன செய்வது என தெரியாமல் ஜீவா முழிக்கிறான். காலில் விழந்து மூர்த்தியிடம் தன் முதல் மாத சம்பளத்தைக் கொடுக்கிறான் கண்ணன்.
17 ஆயிரத்தைக் கொடுத்தான் கண்ணன். அதற்கு இவன் ஜாஸ்தியா சொன்னமாதிரி இருந்துதே. பிடித்தம்போக இவ்ளோதான் கிடைச்சிருக்குமோ என மீனா யோசிக்கிறாள். மாசாமாசம் 17 ஆயிரம் ரூபாய் கண்ணன் வீட்டில் குடுத்துடுவான் என கண்ணனே சொல்கிறான். அதற்கு ஜீவா பரவாலடா சூப்பர் என்று மெச்சுகிறான்.
அடுத்தடுத்து பல செலவுகள் இருக்கு என கவலைல உக்காந்துருந்தேன் பரவாலடா நீயும் சம்பாதிக்க ஆரம்பிச்சிட்ட என்கிறான் மூர்த்தி. மேலும் முல்லையைப் பார்த்து கதிர் இன்னும் வரலயா என்று கேட்கிறான். அவளும் கிளம்பிட்டாங்க மாமா இப்ப வந்துடுவாங்க என்று கூறுகிறாள். கதிரும் தன் ஹோட்டலில் வந்த லாபத்தை அண்ணியிடம் கொடுக்கிறான். எல்லா பணத்தையும் என்கிட்டயே கொடுத்துட்டியே நீயும் கொஞ்சம் வச்சிக்க வேண்டியதுதானே என்கிறாள் தனம். அதற்கு அத வச்சி நாங்க என்னக்கா பண்ண போறோம் என்கிறாள் முல்லை.
பின் கதிரிடம் ஹோட்டலில் லாபம் வந்திருக்கிறதா என்பது குறித்து விசாரிக்கிறாள். கதிரும் லாபம் மட்டும் 19 ஆயிரம் வரும் என்கிறான். அப்போதுதான் அதிர்ச்சி காத்திருக்கிறது. எல்லாரும் கொடுத்துட்டாங்க ஜீவா அண்ணே, என ஆரம்பிக்கிறான் கண்ணன். ஜீவாவுக்கு தர்மசங்கடமாகிப் போகிறது. மீனாவும் கோபமடைகிறாள். அப்படியே எழுந்து சென்றுவிடுகிறான் ஜீவா. கண்ணன் சம்பளம் வாங்கிருக்கான் எங்களுக்கெல்லாம் எப்ப ட்ரீட் தரப்போற என்று ஆரம்பிக்கிறாள் முல்லை. அதற்கு ஐஸ்வர்யா குடுத்துர்லாம் என்கிறாள். வாங்கின சம்பளத்தைதான் அப்படியே அண்ணன்கிட்ட குடுத்துட்டீங்கள்ல இப்ப என்ன பண்ணுவீங்க மேடம் என்று மீனா விளையாட்டாக கேட்கிறாள்.
அதற்கு ஐஸ்வர்யா 40 ஆயிரம் ரூபாய் சம்பளம். அண்ணன்கிட்ட பாதி குடுத்துட்டு மிச்சத்த நாங்களே வச்சிக்கிட்டோம் அக்கா என்றது மீனாவுக்கு கோபம் உச்சத்தில் ஏறுகிறது.