பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்!
Pandian Stores Promo Latest-பாண்டியன் ஸ்டோர்ஸின் இன்றைய எபிசோடின் புரோமோ இப்படி வெளியாகியுள்ளது.
Pandian Stores Promo Latest-விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கூட்டுக் குடும்பத்தின் மகிழ்ச்சி, துன்பம், வாழ்க்கை, கனவு, சோகம், துக்கம் என அனைத்தையும் சொல்லும் விதமாக விளங்கிவரும் தொடராகும். அடுத்தடுத்த நாட்களில் மகிழ்ச்சியான பல விசயங்களையும் கொண்டு வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.
அண்ணன், தம்பிகள் மட்டுமில்லாமல் அவர்கள் வீட்டில் வாழ வந்திருக்கும் அண்ணன், தம்பிகளின் மனைவிமார்களும் ஒற்றுமையாக இருந்தாலும் அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் மூலம் விரிசல் ஏற்படுவதும் அவர்களின் பாசப்பிணைப்பு அதனைத் தாண்டி ஒற்றுமையுடன் இருக்கச் செய்வதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் வெற்றி.
எவ்வளவு தான் சோதனைகள் வந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் வாழ்வதன் ரகசியம் இந்த தொடரில் சிறப்பாக காட்டப்பட்டும் கொண்டாடப்பட்டும் வருகிறது.
விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கிற்கு அடித்தளமாக விளங்கும் சீரியல்களுள் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. இவர்கள் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருப்பது நமக்கும் குடும்பத்தில் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தால் நன்றாக இருக்குமே என்கிற ஆசையை ஏற்படுத்தி விடுகிறது.
வழக்கம் போலவே குடும்பம் ஒற்றுமையாக இருந்தால் இடையில் புகுந்து அதனை சீர்குலைக்கும் சில கதாபாத்திரங்களும் அவர்களின் சூழ்ச்சியிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்றும் கதைக்களமும் நிறையவே அமைந்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில்.
மூத்த அண்ணன் மூர்த்தியும் அண்ணி தனமும் இந்த குடும்பத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள். எந்த பிரச்னையையும் இவர்களே முன்வந்து சமாளித்து சமாதானம் செய்து தீர்த்து வைக்கிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எல்லாருமே அடுத்தடுத்து கர்ப்பமாகியிருக்கிறார்கள். தனம், முல்லை, ஐஸ்வர்யா என அனைவரும் குழந்தைபேறு அடைந்த நிலையில் சீரியல் கொஞ்சம் சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கிறது.
மீனா மற்ற மூவரையும் ஒத்த ஆளாக நின்று கவனிக்கிறார். மாத்திரை சாப்பிட நினைவூட்டுறதுல இருந்து அவர்கள் என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாது என செல்லமாக கண்டிக்கும் வரை அனைத்தையும் கையிலெடுத்துக் கொண்டு கவனிப்பில் தாய்மை உள்ளம் கொண்டு செயல்படுகிறார்.
அவ்வை சண்முகி கமல்ஹாசன் போல வேல வேல வேல என பம்பரமாய் சுற்றிக் கொண்டிருக்கிறார் மீனா. இவ்வளவு வேலை செய்வதை மீனாவின் அம்மா பார்த்து வருத்தப்படுகிறார். மீனாவின் கணவர் அவரின் இந்த திடீர் மாற்றம் கண்டு ஆச்சர்யப்படுகிறார். தொடர்ந்து பணி செய்து கொண்டிருப்பதால் அவருக்கு கொஞ்சம் உதவலாம் என பாத்திரத்தை கழுவ உதவுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸின் இன்றைய எபிசோடின் புரோமோ இப்படி வெளியாகியுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2