பான் இந்தியா ஸ்டார்: சுளீர் பதிலளித்த விஜய் சேதுபதி

நேர்காணல் ஒன்றில் ’பான் இந்தியா ஸ்டார்’ என்று தொகுப்பாளர் குறிப்பிட்டதை உடனடியாக இடைமறித்து, "தான் ஒரு நடிகர்" மட்டுமே என்று விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார்.;

Update: 2023-02-07 12:30 GMT

விஜய் சேதுபதி.

ஷாகித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கண்ணா நடிப்பில் "பார்சி" என்ற வெப் சீரிஸ் வரும் 10-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இந்த வெப் சீரிஸை ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளனர். இந்த வெப் சீரிஸ் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் விஜய் சேதுபதி பங்கேற்றார்.

அப்போது அவரை 'பான் இந்தியா ஸ்டார்' என்று தொகுப்பாளர் குறிப்பிட்டார். ஆனால் விஜய் சேதுபதி அப்படி அழைக்க வேண்டாம் என்று கூறி, தான் ஒரு நடிகர் மட்டுமே என்று உடனடியாக பதிலளித்தார். மேலும் தான் ஒரு நடிகர் என்று அழைக்கப்படுவதையே எப்போதும் விரும்புவதாகவும் 'பான் இந்தியா நடிகர்' என்று அழைப்பது ஒருவிதமான மன அழுத்தத்தை கொடுப்பதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.


பிறகு தனது உடல் எடையை குறைத்தது குறித்து பேசிய விஜய் சேதுபதி, "தொடர்ந்து படப்பிடிப்பு இருந்ததால் என்னால் உடற்பயிற்சி செய்யமுடியவில்லை. டயட் இருப்பது குறித்து எனக்கு பெரிய நம்பிக்கையில்லை. எனக்கு சுவையான உணவுகள் பிடிக்கும். அந்த சுவையான உணவுகளை சாப்பிடாமல் இருந்தால் எனது வாழ்க்கை சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக என்னுடைய உடலை சரியாக வைத்துக் கொள்ளமுடியவில்லை. அந்த உடலுக்கு பொருத்தமான கதாபாத்திரங்கள் வந்தது. ஆனால் தற்போது உடலை சரிப்படுத்த வேண்டும் என்று முயற்சியில் ஈடுபட்டு குறைத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

அதே நேர்காணலில் பேசிய நடிகை ராஷி கண்ணா, "நாங்கள் எல்லோரும் நடிகர்கள். எங்களை பிரிப்பது ஏன்?. 'பான் இந்தியா ஸ்டார்' என்று அழைக்கப்படவேண்டும் என்று நடிகர்கள் விரும்பவில்லை. அவர்களும் அதைப் பயன்படுத்தியது கிடையாது. வெளியில் உள்ளவர்கள் அப்படி பயன்படுத்துக்கின்றனர்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News