விஜய்க்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்! திடீர் டுவிஸ்ட்!

போதைப் பொருட்கள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் விஜய்யின் பாடல் இருப்பதாக கூறி அவருக்கே நோட்டீஸ் அனுப்பிய கூத்தும் இங்கு நடந்திருக்கிறது. பனையூர் மற்றும் சாலிகிராமம் முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.;

Update: 2023-06-27 10:56 GMT

லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நா ரெடி தான் பாடலில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக பல விவாதங்கள் எழுந்திருக்கும் வேளையில், விஜய்க்கே நோட்டீஸ் அனுப்பி டுவிஸ்ட்டை ஏற்படுத்தியுள்ளனர். விஜய் இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் லியோ. இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா, மன்சூர் அலி கான், அர்ஜூன், மிஷ்கின், கௌதம், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்திலிருந்து முதல் சிங்கிளாக நா ரெடிதான் பாடல் கடந்த வாரம் விஜய் பிறந்த நாளின்போது வெளியிடப்பட்டது. இந்த பாடலில் விஜய் வாயில் சிகரெட்டுடன் பாடல் முழுவதும் வருகிறார் என்பதை பார்த்து பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சினிமாவை சினிமாவாக பார்க்க சொல்லியும் கேட்காத சிலர் இதனை வேண்டுமென்றே உசுப்பி விட்டிருக்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வர நினைப்பதன் காரணமாக அவரது நல் பெயருக்கு களங்கம் விளைவிக்க நினைக்கிறார்கள் என்கின்றனர் விஜய் ரசிகர்கள். பொதுமக்களும் இது சினிமா தானே, சினிமாவில் படிக்க சொல்கிறார்கள் , சாதி இல்லை என்கிறார்கள் அதையெல்லாம் முதலில் ஃபாலோ பண்ணட்டும் அதை பண்ணாமல் சிகரெட் பிடிப்பதை ஃபாலோ செய்வார்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Full View

இந்நிலையில் போதைப் பொருட்கள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் விஜய்யின் பாடல் இருப்பதாக கூறி அவருக்கே நோட்டீஸ் அனுப்பிய கூத்தும் இங்கு நடந்திருக்கிறது. பனையூர் மற்றும் சாலிகிராமம் முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். இதில் விஜய் விரைவில் முடிவு எடுப்பார் எனவும், அநேகமாக படத்தில் பாடல் வரும்போது சிகரெட் பிடிக்கும் காட்சிகள் வராமல் பார்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

நா ரெடி பாடலில் விஜய் சிகரெட் புகைப்பது மாதிரி எந்த காட்சியும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பெஷல் எஃபக்ட் மூலம் அப்படி செட் செய்திருக்கிறார்கள். மற்றபடி இது போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான காட்சிகள் கொண்ட படம் இல்லை என்கிறார்கள் படத்தில் பணிபுரிந்தவர்களில் சிலர். 

Tags:    

Similar News