இன்ஸ்டாநியூஸ் சினிமா சண்டே அப்டேட்!🔥
அடிக்கடி கல்யாணம் & டைவோர்ஸ் செய்து பிரபலமான அந்த நடிகை அண்மையில் மீண்டும் மேரேஜ் பண்ணிக்கிட்டதா ஒரு அம்மாஞ்சி இணையத்தில் சேதி வெளியாச்சு..
அந்த செய்தியை ஓரிரு நாள் கண்டுக் கொள்ளாமலிருந்த மேற்படி நடிகை அச்சேதி போட்ட இணைய குரூப் ஓனர் வீட்டு வாசலில் நின்னு தன் பாணியில் நீதிக் கேட்டாராம்..இதை எதிர்பாராத அந்த பாரம்பரிய நிறுவன மொதலாளி உத்தரவின் பேரில் 'நம்ம ரிப்போர்டருங்க கிடைக்கும் சேதியை ஏகப்பட்டவங்கிட்டே க்ராஸ் செக் எல்லாம் செஞ்சுதான் வழங்கிறாய்ங்க.. இப்ப இந்த ஆக்டரஸ் செய்தியால் காயப்பட்டிருப்பதால் மன்னிப்பு.. மன்னிப்பு., மன்னிப்பு'- அப்ப்டீன்னு கேட்டிருக்கிறாய்ங்க..
பொதுவா தவறான செய்திகளை பகிர்ந்ததமைக்கு வருத்தம் தெரிவிப்பது போல் இல்லாமல் இந்த மேனேஜ்மெண்ட் மன்னிப்பு கேட்டதன் பின்னணியில் ஒரு பதினைந்து நிமிச ஆடியோ இருக்குது என்பதுதான் ஹைலைட் .