இன்ஸ்டாநியூஸ் சினிமா சண்டே அப்டேட்!🔥
பிரசாந்த் கிஷோர் தெரியுமில்லையா? அரசியல்வாதிகளின் வாழ்க்கையை வளப்படுத்த திட்டம் போட்டு கொடுத்தே பெருசா பணம் சம்பாதிச்சாருங்கோ.. அவரின் வாழ்க்கைக் கதையை நம்ம ரெட் ஜெயண்ட் புரொப்பரைட்டர் உதயநிதி வெப்சீரிஸ் எடுக்கப் போறதா ஒரு தகவல் கசியுது.
தற்போது உதயநிதியின் ஆலோசகரா இருக்கும் முன்னாள் பத்திரிகையாளர் ஒருவரின் ஸ்கிரிப்ட் & இயக்கத்தில் உருவாகும் பிரசாந்த் ரோலில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க ஆலோசனை வேற நடக்குதாம்
முன்னதா இதே பி.கி-யின் அதாங்க பிரசாந்த் கிஷோரின் லைஃப் ஸ்டோரியை ஷாருக்கான் தன்'ரெட் சில்லிஸ்' தயாரிப்பு நிறுவனம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் முதல்வரின் நிழலான மருமகன் தலையிட்டு டீலை முடிச்சிப்புட்டதாவும் விரைவில் அரசியல் ஆலோசகரின் சதுரங்க வேட்டை தயாராகுமுன்னும் தெரிய வருது