ஷில்பா ஷெட்டி 1975 ஜூன் 8 அன்று பிறந்தார்.பாஜிகர் (1993) திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து பாலிவுட் ,தமிழ் , தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்கள் அனைத்தையும் சேர்த்து அவர் 40 திரைப்படங்களை நெருங்கிவிட்டார். 1994 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆக் திரைப்படத்தில் முக்கியப் பாத்திரத்தில் அவர் நடித்தார். ஷில்பா தனது நடிப்புத் தொழிலில் இருந்து பலமுறை புறக்கணிக்கப்பட்டாலும் தன் திறமையை மீண்டும் மீண்டும் நிரூபித்தார். தத்கன் (2000) மற்றும் ரிஷ்தே (2002) ஆகிய திரைப்படங்களில் அவருடைய பாத்திரங்கள் பாராட்டப்பட்டன. பிர் மிலேங்கே (2004) திரைப்படத்தில் அவர் எயிட்ஸ் நோயாளியாக நடித்ததற்காக பல விருதுகளைப் பெற்றார். அவரது இளைய சகோதரி ஷமிதா ஷெட்டியும் ஒருபாலிவுட் திரைப்பட நடிகை ஆவார்.
ஷில்பா சந்தேகத்திற்கு இடமாக மாஃபியாவுடன் தொடர்பு உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். 2006 ஆம் ஆண்டில் அவருக்கு நயமின்மையோடு இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு
பற்றாணை தரப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் ஷில்பா, பிரிட்டிஷ் செலிபிரிட்டி பிக் பிரதர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அதில் அவருடன் பங்கு பெற்ற ஜேட் கூடி, ஜோ ஓ'மேயரா மற்றும் டேனியல் லியோட் ஆகியோரால் சர்வதேச இனவெறி சர்ச்சையில் சிக்கிய பிறகு ஷில்பா நிகழ்ச்சியின் இறுதியில் 63% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் . அச்சம்பவம் அவரை 2007 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையிலும் அவரது நிலையினை மீண்டும் நிலைநிறுத்தியது. அந்த ஆண்டு அவர் நடித்த லைஃப் இன் எ... மெட்ரோ மற்றும்அப்னே ஆகிய இரு திரைப்படங்களும் வெற்றி பெற்றன. லைஃப் இன் எ... மெட்ரோவில் அவரது நடிப்பு சிறப்பாக விமர்சிக்கப்பட்டது.
ஷில்பா ஷெட்டி பண்ட் சமூகத்தைச் சேர்ந்த பாரம்பரியமான கட்டுக்கோப்பான குடும்பத்தில் மங்களூரில் பிறந்தார்.அவர் சுரேந்திரா மற்றும் சுனந்தா ஷெட்டியின் மூத்த மகள் ஆவார். அவரது பெற்றோர் மருந்துத்தொழில் துறையில் பயன்படுத்தப்படும் மூடிகள்தயாரிப்பாளர்கள் ஆவர். ஷில்பாவின் தாய் மொழி துளு ஆகும். எனினும் அவர் ஆங்கிலம், கன்னடா, மராத்தி, இந்தி , தமிழ் ,குஜராத்தி, தெலுங்கு , உருது மற்றும் அடிப்படை பிரெஞ்சு போன்ற மொழிகளும் பேசுவார்.மும்பையில் செம்பூரில் உள்ள செண்ட் ஆண்டனி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அவர் கல்வி பயின்றார். பின்னர் மாதுங்காவில் உள்ள போடர் கல்லூரியில் கல்வி பயின்றார். அவர் ஒரு தேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் ஆவார். அவரது பள்ளிப் பருவத்தில் கைப்பந்து விளையாட்டு அணித் தலைவராக இருந்துள்ளார். அவர் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். அவர் தற்போது ஜோடியாக நடனமாடும் விளையாட்டு நிபுணராகவும் ஆர்வலராகவும் உள்ளார்.ஷில்பா தற்போது மும்பையில் அவரது பெற்றோர் மற்றும் இளைய சகோதரியும் பாலிவுட் நடிகையுமான ஷமிதா ஷெட்டியுடன் வசித்து வருகிறார்.
ஃபாரெப் (2005) என்ற திரைப்படத்தில் அவரும் அவரது சகோதரியும் இணைந்து நடித்தனர். 5 அடி 10 அங்குலம் (178 செ.மீ) உயரமுள்ள ஷில்பா ஷெட்டி பாலிவுட் நடிகைகளில் மிகவும் உயரமானவர் ஆவார். இங்கிலாந்தில் உள்ள சர்ரேவில் செயிண்ட் ஜார்ஜின் மலையில் சமீபத்தில் ஷில்பா அவரது காதலர் ராஜ் குந்த்ராவுடன் சேர்ந்து ஒரு வீடு வாங்கியிருப்பதாக 2009 மார்ச் 29 அன்று தெரியவந்தது.
1991 ஆம் ஆண்டில் ஷில்பா அவரது 16 வயதில் லிம்காவுக்காக மாடலிங் செய்ததன் மூலம் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். 1993 ஆம் ஆண்டில் பாஜிகர் திரைப்படத்தில் ஷில்பா அறிமுகமானார். அதில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட காதலனால் கொல்லப்படும் பெண்ணாக நடித்தார். ஷாருக்கான் மற்றும் கஜோல் ஆகியோருடன் சீமா என்ற துணைப் பாத்திரத்தில் ஷில்பா நடித்தார். அத்திரைப்படம் பெரியளவில் வெற்றி பெற்றது. பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருதுக்கு ஷில்பா பரிந்துரைக்கப்பட்டார்.
1994 ஆம் ஆண்டில் ஆக் திரைப்படத்தில் அவரது முதல் முதன்மைப் பாத்திரம் அமைந்தது. அத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வெற்றியைப் பெற்றது. அதே வருடத்தில் அக்ஷய் குமாருடன் ஷில்பா நடித்த மெயின் கிலாடி டு அனாரி என்ற திரைப்படம் வெற்றிப் பெற்றது. இதன் பிறகு பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வெற்றியையும் தோல்வியையும் தழுவின. ஷில்பா அதே ஆண்டில் ஆவ் பியார் கரேன் என்ற பெரிய பட்ஜெட் படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து 1995 ஆம் ஆண்டில் ஹாத்கடி என்ற படத்தில் நடித்தார். சைஃப் அலிகான்,கோவிந்தா மற்றும் மது ஆகியோருடன் ஷில்பா பணியாற்றினார்.
ஆனால் அத்திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிபெறவில்லை. 1997 ஆம் ஆண்டு ஷில்பாவின் தொழில் வாழ்க்கையில் மும்முரமான ஆண்டுகளில் ஒன்றாக அமைந்தது: வீதேவா தானி பாபு என்ற தெலுங்கு மொழிப் படத்தில் ஆரம்பித்து அவர் அந்த ஆண்டில் ஆறு வெவ்வேறு திரைப்படங்களில் நடித்தார்.
அந்த ஆண்டின் முதல் பெரிய பாலிவுட் அதிரடி செயல்கள் மிக்க திரைப்படமாக ஷில்பா நடித்த அவ்ஜார் அமைந்தது. ஷில்பா அந்த படத்தில் சல்மான் கான் மற்றும் சஞ்சய் கபூர் ஆகியோருடன் இணைந்து பிராத்னா தாக்கூர் என்ற பாத்திரத்தில் நடித்தார். 1998 ஆம் ஆண்டில் ஷில்பாவிற்கு பர்தேசி பாபு மட்டுமே வெளியானது. அதில் அவரது நடிப்பு விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்றது. அத்திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகைக்கான பாலிவுட் திரைப்பட விருதினை ஷில்பா பெற்றார்.
2000 ஆம் ஆண்டில் தத்கன் படத்தில் நடித்ததற்காக ஷில்பா பாராட்டப்பட்டார். அந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கணிசமான வெற்றியைப் பெற்றது. அந்த பாத்திரத்திற்காக அவர் வெவ்வேறு விருது விழாக்களில் சிறந்த நடிகைப் பிரிவில் பல பரிந்துரைகளைப் பெற்றார். அதன் பிறகு அனில் கபூர் மற்றும் கரிஷ்மா கபூர் ஆகியோருடன் ரிஷ்தே (2002) என்ற படத்தில் ஷில்பா நடித்தார். அதில் துடிப்பான மீனவப்பெண் வேடத்தில் அவரது நகைச்சுவையான நடிப்பு பாராட்டப்பட்டது.
அத்திரைப்படதிற்காக பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். மேலும் சிறந்த நகைச்சுவை நடிகை என்ற பிரிவில் பல பரிந்துரைகளைப் பெற்றார். கர்வ் என்ற படத்தில் வெளியீட்டுடன் 2004 ஆம் ஆண்டும் அவருக்கு சிறந்த ஆண்டாக அமைந்தது. அந்த படத்தில் அவர் சல்மான் கானுடன் ஆதரவற்ற முஸ்லீம் நடனப்பெண்ணாக நடித்தார்.ஷில்பாவிற்கு படத்தின் கதை பிடித்திருந்ததால் அவர் அந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். காவல் நாடக வகையைச் சேர்ந்த அந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான வெற்றியைப் பெறவில்லை. எனினும்
பீர் மிலேங்கே படத்தில் அவரது நடிப்புக்காக மிகவும் பாராட்டப்பட்டார். அப்படத்தில் திறமையான நகரத்துப் பெண் பாதுகாப்பற்ற உடலுறவினால் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாமல் விலக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான வேடத்தில் நடித்தார். அந்தப் படம், 1993 ஆம் ஆண்டில் வெளிவந்த பிலடெல்பியா என்ற படத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. மேலும் அப்படம் அதுவரை பாலிவுட்டில் சொல்லப்படாத சமூக புறக்கணிப்பை எதிர்த்துப் போராடத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு வெளியானது. அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக ஷில்பா பிலிம்பேர் சிறந்த நடிகை விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். மேலும் அத்திரைப்படம் அவருக்கு எச்.ஐ.வி தொடர்பான தொண்டு செய்ய உந்துதலாக அமைந்தது.
இந்தியாFM இன் திரை விமர்சகர் தரண் ஆதர்ஷ் பின்வருமாறு குறிப்பிட்டார். "பிர் மிலேங்கே முழுமையாக ஷில்பா ஷெட்டிக்கு உரியதாக இருக்கிறது. அவர் வெளிப்படுத்தியிருந்த நடிப்பை சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அவரது திரை வாழ்க்கை பணியில் மிகச்சிறந்த நடிப்பு எனலாம். அவரது சிறப்பான தோற்றத்தின் காரணமாகவே பார்ப்பவர்கள் அந்த பாத்திரத்தை உணர்ந்தும் பிறரது உணர்வை பிரதிபலிக்கும் நடிப்பையும் பார்த்தார்கள்.
அவரது அந்த பாத்திரத்தின் வலி மற்றும் உணர்வுப்பூர்வமாக பொங்கும் அவரது கண்களிலேயே வெளிப்படுத்தியிருந்தார். இந்த ஆண்டில் பார்த்த மிகவும் நினைவில் நிற்கக்கூடிய நடிப்பு." ஆழமற்ற பாடல்கள் மற்றும் நடனங்கள் கொண்ட பாத்திரங்கள் ஆழமான பாத்திரங்களுக்கு பதிலாக இருந்தது என்ற போக்கினை உடைக்கும்.விதமாக அவர் நடித்த அதிரடிச் செயல்கள் நிறைந்ததஸ் (2005) ஓர் முன்மாதிரியாக அமைந்தது. எனினும் பாக்ஸ் ஆபிஸில் அப்படம் சுமாராகவே சம்பாதித்தது. தீவிரவாதத்திற்கு எதிரான அமைப்பின் உறுப்பினர் என்ற வழக்கமற்ற பாத்திரத்திற்காக தன்னை புதிதாக மாற்றி காண வேண்டியிருந்தது என ஷில்பா கூறினார். 2005 ஆம் ஆண்டில் அவர் தனது சகோதரியுடன் இணைந்து ஃபாரெப் படத்தில் நடித்தார்.
ஷில்பாவிற்கு 2006 ஆம் ஆண்டு ஒரே படமான ஷாதி கர்கே பஸ் கயா யார் மிகவும் காலம் கடந்து வெளியானது. அந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியைத் தழுவியது. ஆனால் அவரது பாத்திரமான முழுதாக விருப்பமில்லாத மனைவி பாத்திரத்தில் அவரது நடிப்புக்கு நற்பெயர் கிடைத்தது. 2006 ஆம் ஆண்டில் அவர் ஜலக் டிக்லஜா என்ற சோனி எண்டர்டெயின்மன்ட் டெலிவிசனின் நடன நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்தார். அந்நிகழ்ச்சி ஐக்கிய இராட்சிய நடன நிகழ்ச்சியான ஸ்ட்ரிக்ட்லி கம் டேன்சிங் கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.ஷில்பா ஒரு முறை மணிரத்னத்தின் மேடை நிகழ்ச்சியான நேற்று, இன்று, நாளை என்ற நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றுள்ளார்.