இன்ஸ்டாநியூஸ் சினிமா ஞாயிறு அப்டேட்ஸ்🔥
ஒரு காலத்தில் 30 கோடி சம்பளம் 80 கோடி தான் நடிக்கும் படத்தின் பிஸினஸ் என்றிருந்த சிவகார்த்திகேயன் படங்களின் வரிசையான தோல்வியால் இன்று சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து வருகிறார்.
அதற்கு காரணம் கடன் அதிகமாகி போனதுதானாம்..இவர் நடித்து வெளி வந்த ரெமோ, வேலைக்காரன் படங்களின் தயாரிப்பாளர்கள் கடைசி நேரத்தில் இந்தப் படங்களை சிவாவின் தலையில் கட்டிவிட்டு எஸ்கேப்பாகியதிலிருந்து இவர் வீழ்ச்சி தொடங்கியது என்கிறார் அந்த சீனியர் புரொடக்ஷன் மேனேஜர்.