துணிவு அப்டேட்: வேற லெவல் சண்டைகாட்சி, வெறித்தனமாகும் அஜித் ரசிகர்கள்

படத்தில் வரும் வெடிகுண்டு காட்சி இந்திய படங்களில் இதற்கு முன் பார்த்திருக்க மாட்டார்கள் என இந்த படத்தில் வில்லன் டீமை சேர்ந்த சிராக் ஜானி கூறியுள்ளார்

Update: 2023-01-09 08:13 GMT

நடிகர் அஜித், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'. ‌இந்த படத்திற்கு ஒளிப்பதிவு நிரவ் ஷா, கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சிகளை வடிவமைப்பு செய்கிறார்‌‌.

சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் டிரெய்லர் 60 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி வைரலாகி வருகிறது. துணிவு படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் டீமை சேர்ந்த சிராக் ஜானி தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் இப்படத்தில் வரும் ஒரு சில காட்சிகளை பற்றி கூறியுள்ளார்


அந்த பேட்டியில் அவர் கூறியதாவது: இந்த படத்தில் ஹீரோ இவர் தான், வில்லன் இவர் தான் என சொல்ல முடியாது. இந்த கதையில் ஒவ்வொரு வில்லனுமே ஹீரோ தான். இந்த படத்தில் ஒரு வெடிகுண்டு காட்சி இருக்கு. இந்த மாதிரி காட்சிகளை பெரும்பாலும் இந்திய படங்களில் இதற்கு முன் பார்த்திருக்க மாட்டார்கள். அவ்வளவு ரியலாக இந்த சண்டைக் காட்சியை சுப்ரீம் சுந்தர் உருவாக்கியுள்ளார். சில சண்டை காட்சிகள் அடுத்த லெவலில் தல ரசிகர்களை மிரள வைக்கும். ஒரு மெகா செட்டில், ஒரு மெகா நட்சத்திர பட்டாளத்துடன் இருக்கும். அதனாலேயே இது ஒரு மெகா பவர்." என கூறியுள்ளார்.

துணிவு படத்தில் தனக்கு கேங்ஸ்டா பாடல் பிடிக்கும் என கூறிய சிராக், இதில் தான் கேங்ஸ்டராக வருவதாக கூறினார். மேலும் இந்த படத்தின் போஸ்டர்களை மட்டுமே வைத்து அஜித் சார் கேரக்டரையோ படத்தின் கதையையோ ஒரு முடிவுக்குள் கொண்டு வர முடியாது. இதில் பல அடுக்குகள் உள்ளனர். அஜித் சார் எமோஷன் பகுதிகள் நிறையவே நம்மை ஆச்சரியப்படுத்தும் என்று கூறினார்

அஜித் பற்றி கூறுகையில், முதன் முதலில் அஜித் சாரை செட்டில் சந்திக்கும்போது, அவரே தன்னை "ஹாய்.. நான் அஜித்குமார்," என அறிமுகப்படுத்திக் கொண்டார். தனது மேக்கப் மேன், ஸ்போர்ட் பாய் ஆகியோரிடமும் பணிவுடன் போய் பேசிக்கொண்டிருந்தார், அவர் அவ்வளவு எளிமையும் தூய்மையும் கொண்டவர் என நெகிழ்ந்து போனார்.


குறிப்பாக 'நோ கட்ஸ் .. நோ குளோரி (வலிமை இல்லாமல் மகிமை இல்லை)' எனும் பஞ்ச் டயலாக் இந்த படத்துடன் எப்படி என்பது படம் பார்த்தால் புரியும். "அஜித் சார் இந்த படத்தில் நிறையவே விஷயங்களை செய்வார். அதெல்லாம் தான் அவரை ஒரு இடத்துக்கு எடுத்துச் செல்லும், அதுதான் No Guts No Glory. இது ஒரு டிப்பிக்கல் ஹெச்.வினோத் படம் என்றும், அவருக்கும் அஜித் சாருக்குமான கெமிஸ்ட்ரி, வலிமையான ஒரு பிணைப்பாக உள்ளது என கூறியுள்ளார்ர்.

வரும் பொங்கலுக்கு (11.01.2023) துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Tags:    

Similar News