ரஜினிக்கு அடுத்து தனுஷை இயக்கும் இயக்குநர்!
ரஜினி படத்தை இயக்கியதைத் தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்கவிருக்கிறார் பிரபல இயக்குநர் ஒருவர். இதனால் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.;
ரஜினி படத்தை இயக்கியதைத் தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்கவிருக்கிறார் பிரபல இயக்குநர் ஒருவர். இதனால் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வளர்ந்து வருபவம் நெல்சன் திலீப் குமார். சிவகார்த்திகேயனை வைத்து 100 கோடி வசூல் படத்தைக் கொடுத்ததும் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தை தந்தார். அந்த படம் சரியாக போகாத நிலையிலும் அவரது அடுத்த படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஷிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விரைவில் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடொக்ஷன் பணிகள் முடிவடைந்து படத்துக்கான டப்பிங் பணிகள் விரைவில் துவங்கும் என்று கூறப்படுகிறது. அதாவது வரும் ஜூன் 1ம் தேதி முதல் அனைத்து நடிகர்களும் வரிசையாக அடுத்தடுத்து தங்கள் காட்சிகளுக்கு டப்பிங் செய்யவுள்ளார்கள் என்கிறார்கள்.
இதனையடுத்து நெல்சன் திலீப்குமார் என்ன படம் இயக்கப்போகிறார் யாரை இயக்கப்போகிறார் என ரசிகர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். அடுத்து தனுஷ் படத்தை நெல்சன் இயக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. நெல்சன் சொன்ன கதையை தனுஷ் டிக் அடித்து இருக்கிறார்களாம். இதனால் அவர் தற்போது நடித்து வரும் கேப்டன் மில்லர், அடுத்து இவரே இயக்கி நடிக்கவுள்ள சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ஆகிய இரண்டையும் முடித்துக் கொண்டு நெல்சன் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இதுவரை நெல்சன் தரப்பிலோ, தனுஷ் தரப்பிலோ இந்த விசயத்தை அவர்கள் வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.