முடிவுக்கு வந்தது நயன்தாராவின் இரட்டை குழந்தை வாடகைத்தாய் விவகாரம்

நயன்தாராவின் இரட்டை குழந்தை வாடகைத்தாய் விவகாரம் தற்போது அமைச்சர் சிவசங்கர் அளித்த விளக்கத்தால் முடிவிற்கு வந்துள்ளது.

Update: 2022-10-16 12:32 GMT

அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் நடிகை நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன்.

காதலர்களாக இருந்த நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள பிரமாண்ட ரிசார்ட் ஒன்றில் இதுவரை எந்தப் பிரபலமும் செய்யாத அளவுக்கு தங்களது திருமணத்தை வித்தியாசமாக செய்து கொண்டனர். ஆம். இதுவரை எந்தப் பிரபலங்களின் திருமணத்திலும் இப்படியொரு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்னும் அளவுக்கு, திருமணத்தில் கலந்து கொண்ட அத்தனை பிரபலங்களும் திருமண ஏற்பாட்டாளர்கள் விதித்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே திருமணத்தில் பங்கேற்றனர்.

குறிப்பாக, திருமண அரங்குக்கு சற்று தூரத்திலேயே திருமணத்துக்கு வநத அனைவரின் வாகனங்களும் நிறுத்தப்பட்டு பார்க்கிங் செய்யப்பட்டன. அதன்பிறகு, திருமண ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலமே திருமண அரங்குக்கு அழைத்துச் செல்ல்ப்பட்டனர். மேலும், திருமண அரங்குக்குள் யாருமே செல்போன் மற்றும் கேமராக்கள் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. இது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள்.

இத்தனைக் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டே நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணத்தில் அனைவரும் கலந்துகொண்டனர். இந்தக் கட்டுப்பாடுகள் குறித்து பெரும்பாலானவர்களுக்கு உள்ளுக்குள் வருத்தமும் அதிருப்தியும்தான். ஆனாலும், சகித்துக் கொண்டே திருமணத்தில் கலந்து கொண்டனர். இது அப்போது பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

இந்தநிலையில், திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையில், கடந்த அக்டோபர் 9-ம் தேதி நாங்கள் அம்மா - அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. அனைவரும் எங்களை ஆசீர்வதியுங்கள் என்று ட்விட்டரில் விக்னேஷ் சிவன் பதிவிட்டார். அவ்வளவுதான் பற்றிக் கொண்டது விவகாரம். திருமணமான நான்கு மாதங்களில் எப்படி குழந்தை பிறந்தது… வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது என்ற நிலையில், சட்டத்தை மீறினர் என்றொருபுறம் குற்றச்சாட்டு... புகார் என்றெல்லாம் விவகாரம் உக்கிரமாக உஷ்ணமாகியது. விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தை பிறந்த சம்பவத்தில் வாடகைத்தாய் குறித்து, பல்வேறு கேள்விகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன.

சட்டத்தை முறையாகப் பின்பற்றி அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தையைப் பெற்றெடுத்தனரா என விவாதம் எங்கும் எழுந்தன. வாடகைத்தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அண்மையில், தமிழக சுகாதார நலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அமைத்தார்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டிருந்ததாக விசாரணைக் குழுவிடம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்ததிற்கும் அவர்கள் ஆதாரங்களை சம்ர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுகொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக அவர்கள் அரசிடம் விளக்கம் அளித்துள்ளனர். அவ்விளக்கத்தின் மூலமாக வாடகைத்தாய் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கபட்டுள்ளது.றெக்கைகட்டிப் பறந்த சர்ச்சைகள் அனைத்தும் தற்போது ஒரு முடிவுக்கு வந்தன

Tags:    

Similar News