கல்லூரி விழாவை கலகலக்கச் செய்த நயன்தாரா!

நடிகை நயன்தாரா சமீபத்தில் கலந்து கொண்ட கல்லூரி விழா புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Update: 2023-02-07 09:30 GMT

நடிகை நயன்தாரா சமீபத்தில் கலந்து கொண்ட கல்லூரி விழா புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

நடிகை நயன்தாரா சமீபத்தில் கலந்து கொண்ட கல்லூரி விழா புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கல்லூரி விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியையே கலகலத்துப் போகச் செய்துள்ளார். வருங்கால மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி அவர்களின் மனம் கோணாதபடியும் அழகாக பேசி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார் அவர்.

சினிமா பிரபலங்கள் என்றாலே நாலு கடைகளைத் திறந்து வைக்க வேண்டியிருக்கும், விளம்பரங்களில் நடிக்க வேண்டியிருக்கும். கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டியிருக்கும். ஆனால் நயன்தாரா ஒரு நடிகை என்பதால் இதுவரை பெரிய அளவில் எந்த கல்லூரி விழாக்களிலும் அவரை அழைத்தது கிடையாது. ஆனால் திருமணத்துக்குப் பிறகு தனது கொள்கையை மாற்றியிருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. சமீபத்தில் சென்னை அருகே தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்திருக்கிறார் நயன்தாரா.

சமீபத்தில்தான் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். உயிர், உலகம் என தமிழில் பெயர் வைத்து அசத்தியிருந்தனர் இந்த இணையர். இப்போது அஜித்குமார் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கிடைத்தது பின் அந்த வாய்ப்பு பறிபோனது குறித்தே இணைய தளங்களில் பேச்சு அடிபட்டு வந்தது.

விக்னேஷ் சிவனும் குறிப்பால் தனது டிவிட்டர் கணக்கிலிருந்து அஜித் புகைப்படத்தை நீக்கி இதனை உறுதி செய்துள்ளார். அவரின் அடுத்த படம் குறித்த எந்த தகவலும் வெளிவராமல் இருந்து வந்த நிலையில், இப்போது நயன்தாரா கல்லூரி விழா புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு பறிபோன போது, நயன்தாரா அவருக்காக நின்றார். லைகாவிடமும், அஜித் தரப்பிடமும் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனாலும் இந்த பட வாய்ப்பு இல்லை என்றாகிவிட்ட நிலையில், அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்துக்கு இயல்பாகவே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

நயன்தாரா கலந்து கொண்ட கல்லூரி விழாவில் மாணவர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார் நயன்தாரா.

வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மிக அதிகமாக அழுத்தம் கொள்ள வேண்டாம். மனதை தயார் படுத்திக் கொள்ளுங்கள். எப்படி இருந்தாலும் வாழ்க்கைல எல்லாருமே வெற்றிகரமாக மாறுவீங்க. ஆனா அந்த நேரத்துல நாம முன்னாடி வருத்தப்பட்ட காலங்கள பத்தி நினைச்சி கவலை கொள்வீங்க. இதனால எப்பவும் ஹேப்பியா இருங்க என்று பேசியுள்ளார்.

Tags:    

Similar News