அன்னபூரணி படத்தில் நயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா?

அன்னபூரணி படத்தில் நயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா என ரசிகர்கள் வாயைப் பிளக்கின்றனர்.;

Update: 2023-12-02 13:00 GMT

தென்னிந்திய சினிமாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை நயன்தாரா. இவர் தற்போது ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் அன்னபூரணி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் நயன்தாராவின் கேரியரில் 75-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ்.ரவிக்குமார், ரேணுகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், அன்னபூரணி படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அன்னபூரணி படத்தில் நடிக்க நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இதுவரை நயன்தாரா நடித்த படங்களில் இதுவே அதிக சம்பளம் பெற்ற படமாக அமைந்துள்ளது.

நயன்தாராவின் சம்பளம் தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ஜவான் படத்தில் நடிக்க நயன்தாரா ரூ.8 கோடி சம்பளம் வாங்கியிருந்தார். அதற்கு முன்பு வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் ரூ.6 கோடி சம்பளம் வாங்கியிருந்தார்.

இந்தியாவில் நடிகைகள் மத்தியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். அவருக்கு இணையாக சமந்தா, திரிஷா, அனுஷ்கா ஆகியோரும் அதிக சம்பளம் வாங்குகின்றனர்.

Tags:    

Similar News