அன்னையர் தினம்: குழந்தைகளுடன் உள்ள போட்டோவை வெளியிட்ட நயன்தாரா
Nayanthara latest photos with baby-நயன்தாரா குழந்தைகளுடன் உள்ள போட்டோக்களை விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Nayanthara latest photos with baby-தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு சில மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.
இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது. அதன்பிறகு சாரகேசி முறையில் குழந்தை பெற்றதாகவும், கடந்த ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் நயன்தாரா விக்னேஷ் சிவன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு இது தொடர்பான பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் துவங்கியது.
திருமணத்திற்கு பிறகும் நயன்தாரா தற்பொழுது படங்களில் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இந்த நிலையில் நயன்தாரா தற்பொழுது பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை அட்லி தான் இயக்கி வருகிறார். இந்த நிலையில் அன்னையர் தினத்தை பலரும் கொண்டாடி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் பலரும் அம்மா மற்றும் குழந்தைகளுடன் உள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நயன்தாரா முதன்முறையாக தன்னுடைய குழந்தையை கையில் ஏந்திய பொழுது விக்னேஷ் சிவன் புகைப்படத்தை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தற்பொழுது விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படமும் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.