திறந்தவெளியில் உடை மாற்றிய நயன்தாரா..! படத்துக்காக இப்படியெல்லாம் பண்ணிருக்காங்களா?
அந்த காட்சியில் முதலில் நயன்தாராவின் உடை மிகவும் ஒழுங்கீனமாக இருந்ததாம். இது படத்துக்கு கெட்டப்பெயரை வாங்கித் தந்துவிடும்;
கஜினி படத்தின் ஷூட்டிங்கில் திறந்த வெளியில் சட்டையை மாற்றி தான் ஒரு இரும்புப் பெண்மணி என்பதை அப்போதே நிரூபித்திருக்கிறார் நயன்தாரா. ஆண்களுக்கு நிகராக பெண்களும் திரைத்துறையில் சாதிக்க முடியும் என்பதை காட்டியவர் நயன்தாரா.
தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், அடுத்தடுத்து திரைப்படங்களில் சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக நடிக்கும் அளவுக்கு முன்னேறினார். தனது கைத் தேர்ந்த நடிப்பாலும், திறமையாலும் பல நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார். அவ்வப்போது பெரிய நடிகர்களின் படத்தில் அழகு ஹீரோயினாக வந்து நடனமாடியும் சென்றார். அது ஒருவகையில் அவரது மார்க்கெட்டை உயர்த்த பயன்பட்டது.
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும்போது லேடி சூப்பர் ஸ்டாராக மாறி அசத்தினார். அவரது போட்டியாளர்களான பல நடிகைகள் 10, 15 படங்களுடன் மூட்டைக் கட்டிய போது, இவரோ 100வது படங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார். இன்றும் இளமையாக தன்னை மெருகேற்றி, தான் நடிக்கும் படங்களுக்கு தானே விளம்பரம் எனும் அளவுக்கு திறமையான மார்க்கெட்டிங்கையும் உருவாக்கியுள்ளார்.
இவர் ஆரம்ப காலக்கட்டத்தில் நடித்த கஜினி திரைப்படம் குறித்து இப்போது ஒரு முக்கியமான விசயம் தெரியவந்துள்ளது. அதில் ஆடையை நடுரோட்டில் கழற்றி நடித்ததாக சினிமா செய்தியாளர் ஒருவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். அது அவரது போல்ட்னஸ் குறித்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.
கேரள மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்ட நயன்தாரா இப்போது சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் மிகப் பெரிய இடத்துக்கு சென்றுவிட்டார். தமிழில் கமல்ஹாசன் தவிர மற்ற எல்லா நாயகர்களுடனும் ஜோடியாக நடித்துவிட்டார் நயன்தாரா.
சரத்குமார் ஜோடியாக ஐயா, ரஜினி ஜோடியாக சந்திரமுகி, தர்பார், அண்ணாத்த, விஜய் ஜோடியாக பிகில், அஜித் ஜோடியாக விஸ்வாசம், சூர்யா ஜோடியாக மாசு என்கிற மாசிலாமணி, விக்ரம் ஜோடியாக இருமுகன், தனுஷ் ஜோடியாக யாரடி நீ மோகினி, ஜெயம் ரவி ஜோடியாக தனி ஒருவன், சிவகார்த்திகேயன் ஜோடியாக வேலைக்காரன், விஜய் சேதுபதி ஜோடியாக நானும் ரௌடிதான் என ஏகப்பட்ட படங்களில் நடித்துவிட்டார் நயன்தாரா.
தனி நபர் நடிகையாக மாயா, டோரா, O2 , நெற்றிக்கண் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவரது ஆரம்பக் கட்ட படமான கஜினியில் இவர் ஒரு துணை நடிகையைப் போலத்தான் வந்திருப்பார். கதாபாத்திர வடிவமைப்பும் இவர் ஒரு ஐட்டம் டான்சர் போலதான் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஒரு காட்சியில் வில்லன்கள் இவரைத் துரத்தி வருவது போலவும் இவர் பதறியடித்து ஓடுவது போலவும் காட்சி அமைந்திருக்கும்.
அந்த காட்சியில் முதலில் நயன்தாராவின் உடை மிகவும் ஒழுங்கீனமாக இருந்ததாம். இது படத்துக்கு கெட்டப்பெயரை வாங்கித் தந்துவிடும் எனவும், சென்சாரில் பிரச்னை வரும் எனவும் கருதி, ஏ ஆர் முருகதாஸ் இந்த சட்டை போட்டு நீ நடிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டாராம். வேறு வழியில்லாமல் வேறு உடை தன்னிடம் இல்லை என்று கூறிய நயன்தாரா, உதவி இயக்குநர்களிடம் உதவி கேட்க அவர்கள் அருகிலுள்ள ஒரு கடையில் சட்டை வாங்கி கொடுத்திருக்கிறார்கள்.
அந்த இடத்திலேயே உடையைக் கழற்றி, புதிய சட்டையைப் போட்டிருக்கிறார் நயன்தாரா. அவரது துணிச்சல் இங்கு பல நடிகைகளுக்கு கிடையாது. அதன்பிறகு இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம்.