கரண் ஜோஹரை வெளுத்து வாங்கும் நயன்தாரா ரசிகர்கள்..!

Nayanthara Latest News- 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் நயன்தாராவை விமர்சித்த கரண் ஜோஹர், நயன்தாராவின் ரசிகர்களிடம் ஏகமாக வசவு வாங்கி வருகிறார்.

Update: 2022-07-28 03:25 GMT

Nayanthara Latest News- பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் நடத்தும் 'காபி வித் கரண்' என்கிற பாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சி பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. அந்நிகழ்ச்சியில் இடம் பெறும் பெரும்பாலான கருத்துப் பரிமாற்றங்களும் அதன் விளைவாக வெளியாகும் விவாதங்களும் அவ்வப்போது வைரலாகி வருவதுண்டு.

அவ்வகையில் அண்மையில், நடிகை சமந்தா, 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, அந்நிகழ்ச்சியில் சமந்தாவிடம் கரண் ஜோஹர், ''தென்னிந்திய சினிமாவில் யார் முன்னணி நடிகை என்று நினைக்கிறீர்கள்?" என்ற கேள்வியைத் தொடுத்தார். இதற்கு பதிலளித்த சமந்தா, "இப்போதுதான் நயன்தாராவுடன் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்தேன்" என்றார் குறிப்பாக.

அவரது இந்த பதில் மூலம் நயன்தாராதான் முன்னணி நடிகை என்று சமந்தா குறிப்பிட்டு உணர்த்தினார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளரான கரண் ஜோஹர், 'என் லிஸ்டில் அப்படி இல்லையே?' என்று கூறிவிட்டு ஓர்மேக்ஸ் மீடியா கருத்துக்கணிப்பில் சமந்தாதான் நம்பர் ஒன் நடிகை என்று இருப்பதைக் குறிப்பிட்டார்.

இதையடுத்து நயன்தாராவின் ரசிகர்கள், கரண் ஜோஹருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைக் காட்டமாகப் பதிவு செய்து தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். தென்னகத்தின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ரசிகர்களால் அதிகம்தான் வறுபடுகிறார் வடக்கத்திய கரண்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News