திருமணத்துக்குப் பிறகும் இப்படி நடிக்கும் நயன்தாரா! ரசிகர்கள் அதிர்ச்சி!
திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் நயன்தாரா கவர்ச்சி உடையில் நடிக்கிறார் எனும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.;
நயன்தாரா மீண்டும் பிகினி அணிந்து நடிக்கவுள்ளார் என்கிற செய்தி வெளியாகியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் திருமணத்துக்கு பிறகும் இப்படி நடிக்க வேண்டுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. இவர் கிட்டத்தட்ட அத்தனை சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்து முடித்துவிட்டார். இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்குடன் நடித்து வருகிறார். அட்லீ இயக்கத்தில் ஷாருக் நடிக்கும் புதிய படமான ஜவானில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஜூன் மாதம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதனை தாண்டி வேறொரு நாளில்தான் படம் வெளியாகும் என்கிறார்கள்.
நயன்தாராவின் முதல் இன்னிங்க்ஸ் பல தோல்விகளையும் அவமானங்களையும் ஏமாற்றங்களையும் பெற்றிருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் அடித்து ஆடி தன்னை யார் என நிரூபித்தார் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக மிளிர்ந்தார். தனது காதலின் அடையாளமாக திருமணம் முடித்து இரு குழந்தைகளுக்கு தாயுமானார்.
முதல் இன்னிங்ஸில் பல படங்களில் நடித்திருந்தாலும் சில வேண்டத்தகாத காட்சிகளில் நடித்திருக்கிறார். ரசிகர்களுக்கு அவை விருப்பமான காட்சிகளாக இருந்தாலும் குடும்பத்துடன் பார்ப்பவர்களை முகம் சுளிக்கச் செய்தது. பில்லா, வல்லவன், எஸ்ஜே சூர்யாவுடனான படம் என பல இவரை ஹாட் கதாநாயகியாக காட்டினாலும் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெறவில்லை. அடுத்ததாக இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல நல்ல கதைகளில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார்.
தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நயன்தாராதான் டாப் ஹீரோயினாக இருந்தார். இப்போது ஹிந்திக்கு சென்ற அவர் அங்கேயும் பிகினி காட்சியில் நடிக்கிறாராம்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் அவர்களது இரண்டு மகன்கள் என நால்வரும் மும்பை சென்றபோது வெளியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்நிலையில், பிகினியில் நயன்தாரா நடிக்கவுள்ளது குறித்த தகவல் கிடைத்ததும் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.
கஷ்டபட்டு எடுத்த பெயரை இப்படி மீண்டும் கெடுத்துவிடக்கூடாது என்று அவர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில், இது குறித்து படக்குழு எந்த தகவலும் வெளியிடவில்லை. இது வெறும் புரளி என்றும் கூறப்படுகிறது. அப்படியானால் நயன்தாரா பிகினியில் நடிக்கவில்லையா என சில ரசிகர்கள் அதற்கும் வருத்தப்படுகின்றனர்.