திருப்பதி கோவிலில் நயன்தாரா திருமணத்துக்கு திடீர் அனுமதி மறுப்பு

திருப்பதியில் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, நடிகை நயன்தாரா- விக்னேஷ் திருமணம் ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது.

Update: 2022-05-28 09:30 GMT

திரைப்பட முன்னணி நடிகை நயன்தாரா, பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். இருவரின் திருமண ஏற்பாடுகள் குறித்து குடும்பத்தார் ஆலோசனை நடத்தி வந்தனர். இதனிடையே, அண்மையில், நயன்தாரா - விக்னேஷ் சிவம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து, இருவரின் திருமணமும் ஜூன் 9-ம் தேதி, திருப்பதியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் கசிந்தன. திருமணம் நடைபெற உள்ள இடத்தையும் இருவரும் அண்மையில் போய் நேரில் பார்வையிட்டு வந்தனர்.

ஆனால், தற்போது நயன்தாராவின் திருமணம் கடைசி நேரத்தில் மகாபலிபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரு வீட்டாரின் தரப்பில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே சுமார் 150 பேர் கலந்து கொள்ளவிருந்த நிலையில், திருப்பதி கோவில் நிர்வாகம், இவ்வளவு எண்ணிக்கையில் அனுமதிக்க இயலாது என்று மறுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து, மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில், வருகிற 9ஆம் தேதி இருவரின் திருமணம் நடைபெற உள்ளது. இருவரின் திருமண அழைப்பிதழ், சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News