நயன் - விக்கி... ஆடம்பர பங்களாவில் ஆரம்பமாகப்போகும் இல்லற வாழ்க்கை..!
விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா பரிசளித்த ஆடம்பர சொகுசு பங்களாவில்தான் நயன் விக்கி இல்லற வாழ்க்கையைத் தொடங்கவிருக்கிறார்கள்.;
நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் நேற்று முன்தினம்(09/06/2022) மகாபலிபுரத்தில் சீரும் சிறப்புமாக திருமணம் செய்துகொண்டனர். திருமண ஏற்பை, 'என் காதலுடன் இணைகிறேன்' என்று பேரன்புப் பொழிவோடு தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்வுடன் பதிவிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.
திருமண வைபவம் முடிந்தவுடன் முதல் பயணமாக திருப்பதிக்கு சென்ற நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அங்கு வெங்கடாஜலபதியை தரிசித்தனர். கோயில்வளாகத்தில் காலனி அணிந்து சென்றார்கள் என்கிற சர்ச்சை ஒருபுறம் எழுந்தது.
இந்தநிலையில், அடுத்து நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் புதிய ஆடம்பர பங்களாவில் இல்லற வாழ்வை ஆரம்பிக்கப்போவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணத்துக்காக தனது அன்புப் பரிசாக நயன்தாராவுக்கு மூன்று கோடி மதிப்பிலான தங்க நகைகளை வாங்கிப் பரிசளித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
அதோடு, ஒரு கோடி மதிப்பில் வைர மோதிரத்தையும் திருமணப் பரிசாக அளித்தாராம். நயன்தாராவும் தன் காதல் கணவன் விக்னேஷ் சிவனுக்கு சென்னையின் முக்கியப் பகுதியில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர சொகுசு பங்களாவை வாங்கி, விக்னேஷ் சிவன் பெயரில் பத்திரப் பதிவும் செய்து உள்ளன்புக் காதலுடன் திருமணப் பரிசாக வழங்கியுள்ளார்.
இந்த பங்களாவில்தான் நயன்தாராவும் வினேஷ் சிவனும் தங்களது இல்லற வாழ்வைத் தொடங்கவிருக்கிறார்களாம்.