''இந்தநாள் என் வாழ்வின் முக்கியமான நாள்...'' - ஜி.வி.பிரகாஷ்குமாரின் நெகிழ்வுப் பதிவு..!

தேசியவிருது பெற்றமைக்காக, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், நடிகர் சூர்யா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-22 15:00 GMT

மத்திய அரசின் 68வது தேசிய விருதுகள் இன்று(22/07/2022) மாலை அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் சூர்யாவின் 'சூரரைப்போற்று' படம் ஐந்து தேசிய விருதுகளை அள்ளியுள்ளது. விருது கிடைத்த மகிழ்ச்சியில் படக்குழுவினர் அனைவருமே மெத்த மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர். குறிப்பாக, நாளை(23/07/2022) நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் என்கிற நிலையில் முன்னதாக இந்த அறிவிப்பு சூர்யாவுக்கான பெரும் பரிசாக அமைந்த்ள்ளது.

இந்தநிலையில், இப்படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்திருப்பதில் தன்னுடைய மகிழ்வை மிகவும் நெகிழ்வோடு குறிப்பிட்டு அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், ''இன்றில்லாவிட்டாலும் ஒரு நாளில் நாம் நினைக்கும் வெற்றி நமக்கானதாக அமையும். அப்போது, நாம் நினைத்தது போல் அனைத்தும் நடக்கும். அதனை இத்தருணத்தில் உணர்கிறேன். மேலும், 'சூரரைப்போற்று' படக்குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றி.

அதேபோல், என்னுடைய தந்தை வெங்கடேஷ் மற்றும் மனைவி சைந்தவிக்கும் இயக்குநர் சுதா கொங்கராவுக்கும் நடிகர் சூர்யா, 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் இப்படத்தில் எனக்கு இசையமைக்கும் வாய்ப்பினை நல்கிய ராஜசேகர் பாண்டியனுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் தேசிய விருது அறிவிப்பு வெளியான இந்த நாளை என் வாழ்க்கையின் முக்கியமான நாளாகக் கருதுகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News