Bigg Boss Season 6 Tamil ஒட்டுமொத்தமாக முதுகில் குத்திய போட்டியாளர்கள்: வெறுத்துப்போன மைனா

Bigg Boss 6 Tamil Day 37 Promo Myna Nandhini Angry -ராணி முதல் லாஸ்ட்டா சேவகி வரைக்கும் அனைத்து போட்டியில் நின்றும் மைனாவை யாருமே ஆதரிக்காததால் கடும் கோபமடைந்த மைனா

Update: 2022-11-16 06:24 GMT

கோபத்தில் தலையணையை தூக்கி எறியும் மைனா

Bigg Boss 6 Tamil Day 37 Promo Myna Nandhini Angry -பிக்பாஸ் வீட்டுக்குள் அவ்வப்போது சுவாரஸ்யம் கூட்டவும், போட்டியாளர்களை சுறுசுறுப்பாக வைக்கவும் பிக்பாஸ் டாஸ்குகளை கொடுப்பார். இந்த டாஸ்குகள் மூலம் தனிப்பட்ட நபர்களுக்கான திறமை அடுத்த வாரத்திற்கான எவிக்‌ஷன் பிராசஸில் இருந்து தப்பிப்பது போன்ற விஷயங்கள் நடக்கும்.

பிக் பாஸ் 6 வீட்டில் இந்த வாரம் ஒரு புது டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. வீடு ராயல் மியூசியம் ஆக மாற போகிறது. அதில் போட்டியாளர்கள் ராஜா, ராணி, இளவரசி, சேவகன் போன்ற ரோல்களில் இருக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது .


இன்று பிக் பாஸ் வீட்டில் புதிதாக ஒரு டாஸ்கை பிக் பாஸ் கொடுத்தார் அது பிக் பாஸ் டீம் மூன்று அணியாக பிரிக்கப்படுகிறது. அரச குடும்ப அணியில் ராஜா- ராணி, இளவரசன்- இளவரசி, ராஜகுரு-படைத்தளபதி ஆகியோர் இருப்பார்கள்.

மற்றொரு அணி சேவகர்கள் எனவும் மூன்றாவது அணி அரண்மனையில் உள்ள மியூசியத்தின் பாதுகாவலர்கள் அணி எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்க் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது அது உச்சபட்ச அதிகாரமாக அரசு குடும்பத்தை சேர்ந்த ராஜா, ராணி, இளவரசன், இளவரசி, ராஜகுரு, படைத்தளபதி அதிக அளவில் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் சேவகர்களாக சேவை செய்ய வேண்டும் என்கிற டாஸ்க் அது.

இதில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அரச குடும்பத்தில் இருந்தால் சொகுசாக இருக்கலாம், அதிகாரம் பண்ணலாம், சேவகர்களாக இருப்பவர்கள் வேலை செய்ய வேண்டும். அரச குடும்பத்தினர் விருப்பப்படி அவர்கள் பணி செய்ய வேண்டும் என்பதால் இந்த டாஸ்க்கில் அரச குடும்பத்தில் எப்படியாவது இடம்பெற்று விட வேண்டும் என்பதற்காக அனைத்து போட்டியாளர்களும் அடித்துக் கொண்டனர்.

அரச குடும்ப பதவிகளுக்கு கடும் போட்டி நிலவியது. அதில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரச்சிதாவும் தேர்வு செய்யப்பட்டனர். எதிர்த்து போட்டியிட்ட மணிகண்டன், ஆயிஷா தோல்வி அடைந்தனர்.

இதே போல் இளவரசன் பதவிக்கு மணிகண்டன், ராம்குமார் போட்டியிட, மணிகண்டன் வென்றார். இளவரசி பதவிக்கு குயின்சி, ஆயிஷா, ஜனனி, மைனா போட்டியிட்டனர். இளவரசியாக தன்னை தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்று கேமரா முன் அழுத முகத்துடன் பேசினார் ஜனனி. அது குழந்தைகள் ஒரு பொருளை அடம்பிடித்து கேட்பது போல இருந்தது. எப்படியோ ஒட்டுமொத்த ஓட்டும் ஜனனிக்கு விழுந்தது. ஜனனி இளவரசியாக தேர்வானார்.

ராஜகுரு பதவிக்கு விக்ரமனும், ஏடிகேவும் போட்டியிட விக்ரமன் தேர்வு செய்யப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் ராஜா ராணி டாஸ்க் ஒரு வாரம் நடக்கும். இந்த போட்டி கடுமையாக இருக்கும் என தெரிகிறது. இதற்கு முன்னர் ஒரு சீசனில் ராஜா-ராணி டாஸ்க்கில் தாடி பாலாஜி மீது ஐஸ்வர்யா வீட்டில் உள்ள குப்பையை கொட்ட வைத்தது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த டாஸ்கிலும் சில சுவாரசியங்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது படைத் தளபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அசீம் உருட்டல் மிரட்டல்  என  ஏதாவது பிரச்னையைக் கிளப்பலாம்.


சும்மாவே ரச்சிதாவை சுற்றி சுற்றி வரும் ராபர்ட் மாஸ்டர் ராஜாவாகவும், ராணியாக ரச்சிதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில்  என்னென்ன செய்வார் என்பது டாஸ்க் முடிவில் தெரியும். எப்படியோ சிலருடைய கேன்வாஸ் மூலம் ஜனனி இளவரசியாகி விட்டார். ஜனனி இளவரசியானதால் அவர் இந்த டாஸ்க்கில் எப்படி செயல்பட போகிறார், அதிகார தோரணையுடன் மற்றவர்களை துன்புறுத்தினால் ஜனனிக்கு கெட்ட பெயராக அமைய வாய்ப்புள்ளது. ஜனனி இளவரசி, தனலட்சுமி சேவகி என்று வரும் பொழுது மோதல் வெடிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த டாஸ்கில் அமுதவணன் தானாக வந்து சேவகராக தன்னை மாற்றிக் கொண்டார். மற்றும் சிலருக்கு சிறுசிறு டாஸ்க்குகள் உள்ளது.

இந்த டாஸ்க் அடிதடியில் முடிய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. . தனலட்சுமி நேற்று பிக் பாஸ் அறிவுரைக்குப்பின் சற்று ஜாலியாக உள்ளார். ஆனால் அவர் வீட்டில் உள்ள சிலருடன் மறைமுகமாக மோதல் போக்கிலேயே உள்ளார். இந்த வாரம் பெரிய சம்பவம் எல்லாம் இருக்கிறது.

அந்த டாஸ்க் அறிவிக்கும்போதே போட்டியாளர்கள் அந்த ரோல்களுக்காக முண்டியடித்து வருகிறார்கள். இளவரசியாக யாரைத் தேர்வு செய்வது என வாக்கெடுப்பு நடக்கிறது. அப்போது மைனாவுக்கு ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. அதன் பின் அதிக வாக்குகளுடன் ஜனனி தான் இளவரசியாக தேர்வு ஆகிறார்.

அதன் பின் இறுதியில் சேவகன் ரோலுக்காக மைனா வந்து நிற்கிறார். அப்போதும் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. இதில் கடுப்பான மைனா, ஒருத்தர் கூட என்ன ஆதரிக்கல. ராணி முதல் லாஸ்ட்டா சேவகி வரைக்கும் நின்றும் எல்லோரும் சேர்ந்து முதுகில் குத்தி விட்டதாகச் சொல்லி , மைனா எல்லோர் முன்பும் கோபமாக பேசி தலையணையை தூக்கி வீசுகிறார்.

சரி! இந்த வார அதகளம் ஆரம்பம்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News