வாய்தா -ங்கற படத்தின் பிரஸ் மீட் இன்னிக்கு மதியம் இருக்குது!
தயாரிப்பாளர் முதல் இசையமைப்பாளர் வரை முற்றிலும் புதுமுகங்களின் முயற்சியாக தயாராகி இருக்குது “வாய்தா” திரைப்படம்.;
வாய்தா -ங்கற படத்தின் பிரஸ் மீட் இன்னிக்கு மதியம் இருக்குது!
தயாரிப்பாளர் முதல் இசையமைப்பாளர் வரை முற்றிலும் புதுமுகங்களின் முயற்சியாக தயாராகி இருக்குது "வாய்தா" படம்.
அறிமுக இயக்குநர் மகிவர்மன் C.S. கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செஞ்சு இருக்கார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் வாய்தா படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகிறார்.
'ஜோக்கர்', 'கே.டி. என்கிற கருப்பத்துரை' படம் மூலம் பிரபலமான நடிகர் மு.ராமசாமி, நாசர், அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், 'நக்கலைட்ஸ்' புகழ் பிரசன்னா மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிச்சிருக்காய்ங்க.
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற 'வாய்தா' திரைப்படம் இதுவரை 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள இபடத்தின் புரொமோசன் பிரஸ் மீட் இன்னிக்கு 3 மணிக்கு நடக்கப் போறதா தகவல் வந்திருக்குது