நியூ குரூப்தயாரிக்க போறதா சேதி

உங்களுக்கு தெரியுமா சேதி....;

Update: 2021-05-05 05:44 GMT

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் இன்னிக்கும் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயராம். 'தெனாலி', 'பஞ்சதந்திரம்' உள்ளிட்ட படங்களில் இவருடைய கதாபாத்திரம் பெரிதும் பாராட்டப்பட்டவை. அப்பேர்பட்டவரோட மகன் காளிதாஸ் ஜெயராம்.

2016ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'மீன்குழம்பும் மண்பானையும்' படத்தில் ஹீரோவா அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து 'பூமரம்', 'ஹாப்பி சர்தார்' உள்ளிட்ட சில படங்களில் நடிச்சிருந்தார். லாஸ்ட் இயர் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான 'பாவக்கதைகள்' ஆநதாலஜி படத்தில் இடம்பெற்றிருந்த 'தங்கம்' என்ற குறும்படத்தில் இவர் ஏற்று நடித்த சத்தார் என்ற திருநங்கை கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பலரும் காளிதாஸ் ஜெயராமுக்குப் பாராட்டு தெரிவிச்சாங்க.இந்நிலையில் கிருத்திகா உதயநிதி இயக்க இருக்கும் புதிய படத்தில் இவர் கமிட் ஆகி இருக்கிறாராம்.. முன்னதாக அஸ்வின் நடிக்க இருப்பதாக தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.. மேலும் கிருத்திகா உதயநிதி இயக்கப் போகும் புதிய படத்தை 'ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன் அப்படீங்கற நியூ குரூப்தயாரிக்க போறதா சேதி வருது

Tags:    

Similar News