மெய்யழகன் எப்ப ரிலீஸ் ஆகுது தெரியுமா? அப்ப விடாமுயற்சி?

மெய்யழகன் எப்ப ரிலீஸ் ஆகுது தெரியுமா? அப்ப அமரன்? விடாமுயற்சி? வேட்டையன்..?

Update: 2024-07-17 10:45 GMT

மெய்யழகன் திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில், தற்போது அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தி - அரவிந்த் சாமி நடித்து வரும் புதிய திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தை விஜய் சேதுபதி நடித்த 96 படத்தின் இயக்குநரான பிரேம்குமார் இயக்குவதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.

கார்த்தியின் 25 வது படமான ஜப்பான் மிகப்பெரிய படுதோல்வியை அடைந்தது. இந்த படத்தின் கதை சரியாக இல்லாத நிலையில், படம் வெளியிட்ட ஒரே நாளில் மண்ணைக் கவ்வியது. இந்த படத்தைத் தொடர்ந்து நலன் குமாரசாமி, பிரேம்குமார் என அடுத்தடுத்து சிறந்த இயக்குநர்களுடன் இணைகிறார் கார்த்தி. இந்நிலையில், 96 பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு மெய்யழகன் என பெயரிட்டு, படப்பிடிப்பும் நடந்து வருகிறது.

சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் பட நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஸ்ரீ திவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். முதல் தோற்றம் கடந்த மே மாதம் வெளியானது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 27ம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்வது என தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது. இதனை இன்று மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர். இதேநாளில் தெலுங்கில் தேவாரா படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஜூனியர் என்டிஆர், கொரட்டலா சிவா இணையும் இந்த படத்தில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சாக்கோ, ஸ்ரீகாந்த், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

செப்டம்பர் 27, அக்டோபர் 10, அக்டோபர் 30 ஆகிய 3 தேதிகளுக்கு மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது. இதில் அமரன், விடாமுயற்சி, வேட்டையன், மெய்யழகன், கங்குவா என 5 படங்கள் முன்னிலையில் இருக்கின்றன. மெய்யழகன் திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த தேதியில் நிச்சயமாக கங்குவா படம் வராது என்பது உறுதியாகியுள்ளது.

இந்த படங்களில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வேட்டையன், அமரன், விடாமுயற்சி ஆகியவற்றின் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் அமரன், விடாமுயற்சி படங்களை ஓடிடியில் ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றுள்ளது. இதே அமேசான் பட நிறுவனம் வேட்டையன், கங்குவா ஆகிய படங்களை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 5ம் தேதி தி கோட் திரைப்படத்தை வெளியிடுவதில் தயாரிப்பு தரப்பு உறுதியாக இருக்கிறது. மெய்யழகன் படம் செப்டம்பர் 27ம் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.

கங்குவா படத்தை அக்டோபரில் அநேகமாக அக்டோபர் 10ம் தேதி வெளியிடும் யோசனையில் படக்குழு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அப்படி நடந்தால், விடாமுயற்சி தீபாவளிக்கும், வேட்டையன் அதைத் தாண்டியும் வெளியாகும். லைகா நிறுவனம் தயாரித்துள்ள விடாமுயற்சி, வேட்டையன் இரண்டும் ஒரே நாளில் ரிலீஸாக வாய்ப்பில்லை என்பதால் ஏதாவது ஒரு படமே தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று தெரிகிறது. 

Tags:    

Similar News