உடைந்த டிவியால் இரண்டாகும் வீடு! கோபத்தின் உச்சிக்கே சென்ற பிரபு!
மருமகள் சீரியலில் இன்றைய எபிசோடில் நடப்பதென்ன? வாருங்கள் தெரிந்துகொள்வோம்;
மருமகள் சீரியல் புரோமோ | Marumagal serial today promo
மருமகள் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். தொடர் அப்டேட்டுக்கு இந்த டெலிகிராம் சேனலில் இணையுங்கள்.
மருமகள் சீரியல் இன்றைய எபிசோட் | Marumagal serial written update
அய்யய்யோ எம காதகன் வந்துட்டான் போலயே என பாட்டி பரிதவிக்கிறாள். அந்த நேரத்தில் வெளியே பிரபு வந்து நிற்கிறான். அவனுக்கு ஒரு ஃபோன் கால் வருகிறது. உள்ளே வரும் பாட்டி, அவன் வந்துவிட்டான் என சொல்லி பயமுறுத்துகிறாள். நீ டிவிய உள்ள கொண்டு போயி வை என்கிறார் அப்பா.
டிவிய நான் துடைக்குறப்ப கை தவறுதலா பட்டு உடஞ்சிட்டு என சொல்கிறார் அப்பா. தம்பியோ தான் தள்ளிவிட்டதா சொல்கிறேன் என்று சொல்கிறான். இப்படி அப்பா, மகன், மகள் ஆகியோருக்குள் விவாதம் நடக்கிறது. கடைசியாக அப்பா தன் தலையில் பொறுப்பை ஏற்கிறாள்.
ரோகினி அழுகிறாள். பிரபுவும் கால் பேசி முடித்துவிட்டு உள்ளே வருகிறான். ஆனால் எல்லாருடைய முகத்திலும் ஏதோ ஒரு பதற்றம் இருப்பதை கண்டு அங்கேயே நிற்கிறான். ஏதோ பிரச்னை என்பதை கண்டுபிடித்துவிட்டான். இப்படி எல்லாரும் ஒன்னா பம்மிட்டு இருந்தீங்கன்னா எனக்கு எதோ செலவு இழுத்துவிடப் போறீங்கன்னு அர்த்தம் என சொல்லிவிட்டு யார் என்ன செலவ இழுத்துவிட்டீங்க சொல்லுங்க என கத்துகிறான் பிரபு.
அப்பா தான் துடைக்கும்போது டிவியை உடைத்துவிட்டதாக தெரிவிக்கிறார். இதையே தயங்கி தயங்கிதான் சொல்கிறார். இது தெரிந்ததும் பிரபு அதிர்ச்சியடைகிறான். கோபப்படுகிறான்.வேகமாக உள்ளே சென்று டிவியை பார்க்கிறான். அது உடைந்து கீழே விழ, கோபத்தில் மீண்டும் எரிச்சலடைகிறான்.
அப்பாவை முறைத்து பார்த்துக்கொண்டே, எரிச்சலில் கத்துகிறான். என் மேல் இருக்கும் கோபத்தை டிவி மேல காட்டுறீங்களா என்று சொல்கிறான். பெத்த புள்ள மேல அவ்ளோ வன்மம் உங்களுக்கு. அப்பா நிலைமையை சமாளிக்க நினைக்கையில், பிரபு கோபத்தில் கத்த ஆரம்பிக்கிறான். ஒரு வேலையை உருப்படியா செய்ய வக்கில்லைனா அத ஏன் செய்றீங்க என திட்டிக்கொண்டிருக்கிறான்.
அப்போது தம்பிக்கும் அண்ணனுக்கும் இடையில் சண்டை ஏற்படப்போகிறது. பண்றதெல்லாம் பண்ணிட்டு மன்னிப்பு வேற கேட்கிற என கோபப்படுகிறான். இந்த கோபத்தை தங்கை மீது காட்ட, இருவரும் முட்டி மோதிக்கொள்ள நினைக்கிறார்கள். அதனை அப்பாவும் அப்பத்தாவும் தடுக்கிறார்கள்.
டிவியை உடைத்துவிட்டாயே அந்த டிவியை வாங்கிக்கொடுடா என சவால் விடுகிறான். அதற்கு அப்பா தம்பியால் எப்படி இதை வாங்கித் தர முடியும் என்ற சொல்ல, பிரபு எங்கேயோ போகட்டும் என்னவோ பண்ணட்டும். போயி பிச்ச எடுறா என பிரபு சொல்ல அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.
உனக்கு டிவி தான முக்கியம் எனக்கு ஒரு வாரம் டைம் குடு. நான் டிவியோ வரேன் என்று சொல்லிவிட்டு கோபத்தில் செல்கிறான். பிரபுவும் கோபத்தில் உள்ளே ரூமுக்கு செல்கிறான். பாட்டியும் தன் மகனிடம் அந்த பெண் குறித்து சீக்கிரம் விசாரிக்கும்படி கேட்கிறார். ரோகினி இதனை நினைத்து அழுகிறாள். என்னால் தான் சின்ன அண்ணனுக்கு இப்படி ஆகிடிச்சி. இனி அவன் என்ன பண்ணுவான் என வருத்தப்படுகிறாள்.
ஆதிரை தன் அப்பா அலுவலகத்துக்கு செல்கிறாள். ஆதார்கார்டு, பான் கார்டு உள்ளிட்ட அரசு அடையாள அட்டைகளில் முகவரி மாற்றம் செய்ய அரசு அலுவலகத்துக்கு செல்கிறாள். தான் செல்வதாக அப்பா சொல்ல, அதற்கு ஆதிரை தான் செல்வதாக சொல்கிறாள். இருவரும் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு இருக்கும் கஷ்டத்தைப் பற்றி பேசிக்கொள்கிறார்கள்.
மருமகள் சீரியல் இன்றைய எபிசோட் | Marumagal serial update today
நமக்குலாம் சொந்த வீடுங்குற கனவு நனைவாகனும் ன்றது அவ்ளோ ஈஸி இல்ல. அடுத்த ஜென்மத்துலயாச்சும் நாம பணக்கார வீட்டுல பிறக்கணும். தூக்கனாங்குருவியாச்சும் பிறக்கணும். அந்த சுதந்திரம் நமக்கு கிடைக்கல. ஏழைகளா இருக்குறது நம்ம தப்பா என்று கேட்கிறார். அந்த நேரத்தில் ஆதிரையின் கல்யாணத்தை பற்றி பேசுகிறார் அப்பா.
அந்த நேரத்தில் ஆதிரைக்கு ஃபோன் வருகிறது. அந்த நேரத்தில் மணி அடித்ததால், இது நல்ல சகுணம் என்கிறார் அப்பா. அந்த பக்கம் பிரபுவின் தங்கை ரோகினி பேசுகிறாள். ஃபோனில் வாட்டர் கேன் கேட்கிறாள் ரோகினி. தான் அங்கு சென்று வாட்டர் கேன் போட்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லி கிளம்புகிறார் அப்பா.
வீட்டில் அப்பத்தா, ரோகினி, பிரபுவின் தந்தை சமையல் செய்துகொண்டிருக்கிறார்கள். அப்பாவ திட்டிவிட்டோமேன்னு பிரபு வருத்தமடைகிறான். அப்பாவிடம் ஸாரி கேட்டுவிட்டு வர நினைத்து கிச்சனுக்கு செல்கிறான் பிரபு. அங்கு அப்பா சமையல் செய்துகொண்டிருப்பதை பார்த்து ஃபீல் பண்ணுகிறான் பிரபு.
மருமகள் சீரியல் இன்றைய எபிசோட் | Marumagal serial today episode
தான் சிறுவயதில் இருக்கும்போது தன்னை ஸ்கூலுக்கு அனுப்பி வைப்பது, ஷூ மாட்டி விடுவது, நல்ல மதிப்பெண் பெற்றால் பாராட்டுவது, சைக்கிள் ஓட்ட சொல்லிக்குடுத்தது, சாப்பாடு ஊட்டிக் கொடுத்தது, தூங்க வைத்தது என அனைத்தையும் நினைத்து கண்கலங்குகிறான் பிரபு. அப்பாவிடம் சென்று மன்னிப்பு கேட்க அவனுக்கு எந்த ஈகோவும் இல்லை. ஆனால் அந்த நேரத்தில் தம்பியும் வந்து நிற்கிறான்.
அப்பாவை அழைத்து, ஹாலுக்கு வரச் சொல்கிறான். அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள். என்ன நடக்கப்போகிறதோ என வருத்தத்தில் இருக்கிறார்கள். பாட்டியும் அப்பாவை நிறைய திட்டிவிட்டாய் பிரபு இனி அவன திட்டாத. பிரபுவும் நான் திட்ட வரவில்லை. அப்பாவிடம் செல்லும்போது தம்பி தடுக்கிறான். மீறி அப்பாவிடம் செல்லும் போது தங்கையும் அப்பாவை விட்டுவிடச் சொல்லி கேட்கிறாள். அப்பாவின் அருகே செல்லும் பிரபு, அப்பாவை நெருங்கி நிற்கிறான்.
மருமகள் நேற்றைய எபிசோட் | Marumagal serial yesterday episode
ஆதிராவை பிரபுவை ஃபாலோ பண்ணிக்கொண்டு செல்கிறான். கேஷுவலாக இருப்பது போல நடித்துக்கொண்டே ஆதிராவின் பின்னாடி செல்கிறான். ஆதிராவுக்கும் கொஞ்சம் சந்தேகம் எழ, அவள் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே செல்கிறாள். திடீரென அது கன்பார்ம் ஆக, நேரடியாக பிரபுவிடம் சென்று கேட்கிறாள். பிரபு ஏதோ சொல்லி சமாளிக்கிறான்.
நான் உங்களை ஃபாலோ பண்ணல, நீங்கதான் என் முன்னாடி நடந்து போறீங்க.
நீங்க என்ன புத்திசாலித்தனமா பேசுறீங்கன்னு நினைப்பா என்று கேட்க , நமக்குள்ள கணக்கு வழக்கெல்லாம் முடிஞ்சிச்சே என்கிறாள்.
பிரபு - கணக்கு வழக்கெல்லாம் முடிஞ்சிது ஆனா பரிகாரம் முடியலையே
காலடி மண்ணை எடுக்க ஆதிரையின் பின்னாடியே செல்கிறான் பிரபு. ஒரு இடத்தில் மண் இருப்பதை பார்த்து பேப்பரில் அள்ளுகிறான். அந்த நேரம் சரியாக ஆதிரை வந்து நிற்கிறாள். கடுப்பாகிறாள்.
பிரபு - அப்படியே எந்திருச்சி எஸ்கேப் ஆகிடுடா. திரும்பி பாக்காம ஓடிடு.
ஆதிரா - ஹே நில்லு. திரும்பு இதுக்குதான் என் பின்னாடி வந்தியா. நீ என் காலடி மண்ண எடுத்தத நான் பாத்துட்டேன்.
பிரபு - என்ன எந்த பொண்ணுக்கும் பிடிக்காதுன்னு சொன்னேல. அதுக்கு பரிகாரம் பண்றேன் என சொல்ல
அந்த நேரத்தில் அங்கு வரும் போலீசிடம் மாட்டி விடுகிறாள் ஆதிரை. அந்த போலிஸ் பிரபுவை காட்டு காட்டென்று காட்ட, அடிக்காதீங்க அடிக்காதீங்க என பிரபு கத்திக்கொண்டு எழுகிறான். ஒரு வழியாக இது கனவு என்பதை உணர்கிறான் பிரபு.
விடிய கால கனவு பலிக்கும்னு சொல்றாங்களே. அந்த பிராடு காலடி மண்ண எடுக்க போனா நம்மள போலீஸ்ல மாட்டி விட்டிருவாளோ. நினச்சி பாக்க இப்பவே கண்ண கட்டுதே.
டாடி டாடி. அந்த வாட்டர்கேன் போடுறவ நம்ம வீட்டுக்குள்ள வந்து என்னயே அடிச்சிட்டா. மம்மியும் அவளுக்குதான் சப்போர்ட் பண்ணாங்க. அவ முன்னாடி என்ன அடிக்க வந்தாங்க என்கிறாள்.
மேகலா, மேகலா. வாட்டர் கேன் போடுறவ என் பொண்ண அடிச்சாளா. அடிச்சாளா
இவ அவளோட அப்பாவ அடிக்க போனா என்று சொல்ல வருவதற்குள் மேகலா பேச்சை நிறுத்திவிடுகிறான் பிரபுவின் சித்தப்பா.
ஆதிரையோட அப்பாவ இவ கை நீட்டுனா. நான் மட்டும் இவள தடுக்கலன்னா நிச்சயமா இவ அவள அடிச்சிருப்பா. எந்த பொண்ணா இருந்தாலும் அப்பாவ மிரட்டுனா அடிக்கத்தான் செய்வாங்க என்கிறாள் மேகலா.
ரௌடிகளை வைத்து ஆதிரையை மிரட்ட ஆள் அனுப்ப சொல்கிறான் அப்பா. டேய் குமரா மேஸ்திரிக்கு ஃபோனப்போடுறா என்கிறான்.
மேகலாவோ நான் போலீஸுக்கு ஃபோன் போடப்போகிறேன் என மிரட்டுகிறாள்.
ஆதிரையும் அவங்க அப்பாவும் பாவப்பட்டவங்க, அவங்களுக்கு நாம தப்பு பண்ணா அந்த பாவம் நம்மள சும்மா விடாது என்கிறாள் மேகலா. அப்பா ஆளெல்லாம் வேண்டாம் இது என் ஆட்டம் நான் பாத்துக்குறேன் என்று வேள்விழி சொல்லிவிட, அப்பாவும் அதையே கேட்டு நகர்ந்துவிடுகிறான்.
பிரபுவுக்கும் ஆதிரைக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என மேகலா நினைக்கிறாள். அதுக்குள்ள சண்டையா என வருத்தப்படுகிறாள்.