மருமகள் சீரியலில் இன்று!
மருமகள் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.;
மருமகள் சீரியல் புரோமோ | Marumagal serial today promo
மருமகள் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். தொடர் அப்டேட்டுக்கு இந்த டெலிகிராம் சேனலில் இணையுங்கள்.
மருமகள் சீரியல் இன்றைய எபிசோட் | Marumagal serial written update
ஆதிராவை பிரபுவை ஃபாலோ பண்ணிக்கொண்டு செல்கிறான். கேஷுவலாக இருப்பது போல நடித்துக்கொண்டே ஆதிராவின் பின்னாடி செல்கிறான். ஆதிராவுக்கும் கொஞ்சம் சந்தேகம் எழ, அவள் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே செல்கிறாள். திடீரென அது கன்பார்ம் ஆக, நேரடியாக பிரபுவிடம் சென்று கேட்கிறாள். பிரபு ஏதோ சொல்லி சமாளிக்கிறான்.
நான் உங்களை ஃபாலோ பண்ணல, நீங்கதான் என் முன்னாடி நடந்து போறீங்க.
நீங்க என்ன புத்திசாலித்தனமா பேசுறீங்கன்னு நினைப்பா என்று கேட்க , நமக்குள்ள கணக்கு வழக்கெல்லாம் முடிஞ்சிச்சே என்கிறாள்.
பிரபு - கணக்கு வழக்கெல்லாம் முடிஞ்சிது ஆனா பரிகாரம் முடியலையே
காலடி மண்ணை எடுக்க ஆதிரையின் பின்னாடியே செல்கிறான் பிரபு. ஒரு இடத்தில் மண் இருப்பதை பார்த்து பேப்பரில் அள்ளுகிறான். அந்த நேரம் சரியாக ஆதிரை வந்து நிற்கிறாள். கடுப்பாகிறாள்.
பிரபு - அப்படியே எந்திருச்சி எஸ்கேப் ஆகிடுடா. திரும்பி பாக்காம ஓடிடு.
ஆதிரா - ஹே நில்லு. திரும்பு இதுக்குதான் என் பின்னாடி வந்தியா. நீ என் காலடி மண்ண எடுத்தத நான் பாத்துட்டேன்.
பிரபு - என்ன எந்த பொண்ணுக்கும் பிடிக்காதுன்னு சொன்னேல. அதுக்கு பரிகாரம் பண்றேன் என சொல்ல
அந்த நேரத்தில் அங்கு வரும் போலீசிடம் மாட்டி விடுகிறாள் ஆதிரை. அந்த போலிஸ் பிரபுவை காட்டு காட்டென்று காட்ட, அடிக்காதீங்க அடிக்காதீங்க என பிரபு கத்திக்கொண்டு எழுகிறான். ஒரு வழியாக இது கனவு என்பதை உணர்கிறான் பிரபு.
விடிய கால கனவு பலிக்கும்னு சொல்றாங்களே. அந்த பிராடு காலடி மண்ண எடுக்க போனா நம்மள போலீஸ்ல மாட்டி விட்டிருவாளோ. நினச்சி பாக்க இப்பவே கண்ண கட்டுதே.
டாடி டாடி. அந்த வாட்டர்கேன் போடுறவ நம்ம வீட்டுக்குள்ள வந்து என்னயே அடிச்சிட்டா. மம்மியும் அவளுக்குதான் சப்போர்ட் பண்ணாங்க. அவ முன்னாடி என்ன அடிக்க வந்தாங்க என்கிறாள்.
மேகலா, மேகலா. வாட்டர் கேன் போடுறவ என் பொண்ண அடிச்சாளா. அடிச்சாளா
இவ அவளோட அப்பாவ அடிக்க போனா என்று சொல்ல வருவதற்குள் மேகலா பேச்சை நிறுத்திவிடுகிறான் பிரபுவின் சித்தப்பா.
ஆதிரையோட அப்பாவ இவ கை நீட்டுனா. நான் மட்டும் இவள தடுக்கலன்னா நிச்சயமா இவ அவள அடிச்சிருப்பா. எந்த பொண்ணா இருந்தாலும் அப்பாவ மிரட்டுனா அடிக்கத்தான் செய்வாங்க என்கிறாள் மேகலா.
ரௌடிகளை வைத்து ஆதிரையை மிரட்ட ஆள் அனுப்ப சொல்கிறான் அப்பா. டேய் குமரா மேஸ்திரிக்கு ஃபோனப்போடுறா என்கிறான்.
மேகலாவோ நான் போலீஸுக்கு ஃபோன் போடப்போகிறேன் என மிரட்டுகிறாள்.
ஆதிரையும் அவங்க அப்பாவும் பாவப்பட்டவங்க, அவங்களுக்கு நாம தப்பு பண்ணா அந்த பாவம் நம்மள சும்மா விடாது என்கிறாள் மேகலா. பிரபுவுக்கும் ஆதிரைக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என மேகலா நினைக்கிறாள். அதுக்குள்ள சண்டையா என வருத்தப்படுகிறாள்.
மருமகள் சீரியல் இன்றைய எபிசோட் | Marumagal serial update today
விரைவில் அப்டேட் செய்யப்படும்
மருமகள் சீரியல் இன்றைய எபிசோட் | Marumagal serial today episode
விரைவில் அப்டேட் செய்யப்படும்
மருமகள் நேற்றைய எபிசோட் | Marumagal serial yesterday episode
விரைவில் அப்டேட் செய்யப்படும்