வீட்டுக்கு வந்த சித்தி...! கோபத்தில் கொந்தளித்த பிரபு..!

அப்பாவோட ரிட்டயர்ட்மெண்ட் பணத்த எல்லாருக்கும் பிரிச்சி கொடு என தம்பி கேட்கிறான். அப்படி செய்யாமல் மொத்த பணத்தையும் ஆட்டையப் போட்டால் உனக்கும் சித்தப்பாக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? என்று கேட்கிறான்.;

Update: 2024-06-18 09:30 GMT

மருமகள் இன்றைய புரோமோ

அப்பாவோட ரிட்டயர்ட்மெண்ட் பணத்த எல்லாருக்கும் பிரிச்சி கொடு என தம்பி கேட்கிறான். அப்படி செய்யாமல் மொத்த பணத்தையும் ஆட்டையப் போட்டால் உனக்கும் சித்தப்பாக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? என்று கேட்கிறான்.

மருமகள் சீரியல் இன்றைய எபிசோட்

லிப்டில் வாட்டர் கேன் கொண்டு வரக்கூடாது என்று அசோசியேசன் மெம்பர் ஒருவர் சத்தம் போடுகிறார். இதனைத் தெரிந்துகொண்டு மகள் வந்து சண்டை போடுகிறார். உங்கள் அசோசியேசனைப் போல எங்களுக்கும் அசோசியேசன் உள்ளது. அது வாட்டர் டேங்க் போடும் அசோசியேசன். நாங்கள் ஒரு முடிவு எடுத்துள்ளோம். அதில் லிப்ட் இல்லாத வீடுகளுக்கு நாங்கள் வாட்டர் கேன் போடுவதில்லை என்று தெரிவிக்கிறார். இதனால் மனம் மாறும் அசோசியேசன் செக்ரட்ரி, தன் தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்கிறார்.

இனிமேல் அந்த பில்டிங்கில் எல்லா வீடுகளுக்கும் லிப்ட்டில் வந்தே வாட்டர் கேன் போடலாம் என்று கூறுகிறார். அனைவரும் இதனை பாராட்டுகின்றனர்.

பிரபு வீட்டில் அனைவரும் நின்று கொண்டிருக்க, அமர்ந்திருக்கும் பாட்டி, ஒரு லிஸ்ட்டை கையில் கொடுக்கிறார். அதில் மாச செலவு கணக்கு எழுதப்பட்டிருக்கிறது. அதனை பாட்டியிடமே படிக்கச் சொல்கிறார் பிரபு. பாட்டியோ கண் தெரியவில்லை என்று கூறி தனது மகனும் பிரபுவின் அப்பாவுமான அவரிடம் படிக்கச் சொல்கிறார். அவரும் படிக்கிறார். வீட்டு வாடகையை சேர்க்காமல் ஒரு மாசத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன்.

இந்நிலையில், கார்த்தியும் சண்டைக்கு வருகிறார். தனக்கு தனியாக ஒர்க்ஷாப் வைக்க 2 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்க, அதனை தர முடியாது என்று சொல்கிறான் பிரபு. இதனையடுத்து கார்த்தி, அப்பாவோட ரிட்டயர்டுமெண்ட் பணத்தை சரியாக அனைவருக்கும் பிரித்து கொடுக்க கேட்கிறான் கார்த்தி. இதனால் இருவருக்கும் சண்டை உருவாகிறது.

கார்த்தி தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரபு சொல்ல, கார்த்தி முடியாது என்கிறான். இதனால் சண்டை பெரியதாகி, இருவரும் ஆளாளுக்கு ஒரு திசையில் செல்கிறார்கள். பிரபு கோபத்துடன் அவனது அலுவலகத்துக்கு செல்கிறார்.

பிரபுவிடம் நண்பர் என்ன பிரச்னை என்று கேட்க, வீட்டில் நடந்ததைப் பற்றி பேசுகிறார் பிரபு. இதனால் தன் தம்பியை அடித்து வாயை உடைப்பேன் என பிரபு சொல்கிறான். சொன்னது மட்டுமின்றி தன் நண்பனின் மூக்கில் குத்தி ரத்தம் வரவழைக்கிறான். இதனால் அங்கு ஜாலியாக இருக்கிறான் பிரபு. மீண்டும் கையை உடைக்க வேண்டும் என்று சொல்லும் பிரபுவிடம் இருந்து தப்பித்து ஓடுகிறான் நண்பன். அவன் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டு, தனக்கு பணம் மிச்சம் என்று சாப்பிட்டுக்கொள்கிறான்.

பிரபு வீட்டில் அவனது சித்தி வந்திருக்கிறார். வீட்டில் அண்ணன் இல்லை என்றும் நீங்கள் வாங்க உக்காருங்க என அனைவருமே சித்தி மேகலையை வரவேற்கின்றனர். திருநீறு கொடுத்து தான் கோவிலுக்கு சென்று வந்ததை கூறுகிறாள் மேகலை. அந்த நேரத்தில் பிரபு தனது பைக்கில் வந்து வீட்டின் முன் நிற்கிறான்.

Tags:    

Similar News