திருமணமா… அரசியலா…த்ரிஷா… பதில்..!
நடிகை த்ரிஷா அரசியலில் ஈடுபடப்போகிறார் என்று இணையத்தில் பரவுகிறது பரபபரப்பு செய்தி. ஆனால், த்ரிஷாவின் திட்டம் வேறு.;
நடிகை த்ரிஷாவும் நயன்தாராவைப் போலவே, தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். எப்போதும் அந்த ரசிகர்களின் எவர் கிரீன் கனவுக்கன்னி இவர். த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என்று மதில் பூனையாக இருக்கும் குறிப்பிட்ட ரசிகர் பட்டாளமும் இவருக்கு ஒருபுறம் உண்டு.
சமகால நடிகைகளான த்ரிஷாவும் நயன்தாராவும் நாற்பது வயதைக் கடந்தாலும் திரையில் தங்களுக்கென ஓர் இடத்தை தக்கவைத்துக்கொண்டு இப்போதும் நாயகி மார்க்கெட்டில் இருந்து நழுவாமல் நிலைத்து வருபவர்கள். இந்தநிலையில், நயன்தாராவுக்கு அண்மையில் திருமணம் நிகழ்ந்து முடிந்த நிலையில், த்ரிஷாவுக்கு எப்போது திருமணம் என்கிற கேள்வி திரைப்பார்வையாளர்கள் மத்தியில் பரவலாய் எழுந்தது.
த்ரிஷாவின் ரசிகர்களிடையேயும் இந்தக் கேள்வி எழாமல் இல்லை. இந்நிலையில், த்ரிஷா அரசியலில் இறங்கப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்தாலும், கூடவே இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்றும் சொல்லப்படுகிறது.
ஆனாலும், நெடுநாட்களாக அரசியலில் ஈடுபடலாம் என்கிற எண்ணமும் த்ரிஷாவின் மனத்தில் உண்டு என்கிற அவரது மனமறிந்தவர்கள், அவ்வாறு அரசியலில் ஈடுபட்டாலும் தேசியக் கட்சி ஒன்றில்தான் இணைய எண்ணியிருக்கிறார் என்கிறார்கள். இந்தநிலையில், திருமணம், அரசியல் எல்லாம் இப்போதைக்கு இல்லை. நடிப்பில்தான் முழுக்கவனமும் செலுத்தப் போகிறேன் என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்து யூகங்களுக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளாராம்.