'பிக்பாஸ் நான்தான்' - மன்சூர் அலிகான் போட்ட 'கண்டிஷன்'
mansoor ali khan not going to bigg boss 6 tamil- 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூத்தடிப்பது எனக்கு பிடிக்கவில்லை. நான் வந்தால், அந்த வீட்டில், நான்தான் பிக்பாஸாக இருப்பேன், என நிபந்தனை விதித்து, நடிகர் மன்சூர் அலிகான் அதிர்ச்சியை தந்துள்ளார்.
bigg boss tamil season 6, mansoor ali khan not going to bigg boss 6 tamil- விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 சீசன், தற்போது மூன்றாவது வாரத்தை, நாளையுடன் நிறைவு செய்ய இருக்கிறது. முந்தைய சீசன்களை போல இல்லாமல், தற்போதைய சீசன் பரபரப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.
கடந்த சீசன்களில், பல நடிகர், நடிகையர் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இருந்தனர். ஆனால், இந்தமுறை சின்னத்திரை நடிகர், நடிகைகளை தவிர, சினிமா நடிகர், நடிகையர், 'மைனா' நந்தினி ஒருவரை தவிர குறிப்பிடும்படியாக யாரும் இல்லை.
மேலும் இரண்டாவது வாரத்தில் முக்கிய போட்டியாளராக இருந்த ஜிபி முத்து, தன் குடும்பத்தை பார்க்க வேண்டும் என சொல்லி, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி சென்றுவிட்டார். மேலும் சாந்தி, 'எலிமினேட்' செய்யப்பட்டு, அவரும் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.
நிகழ்ச்சியில், கலகலப்புக்கு முக்கியமானவராக இருந்த ஜிபி முத்து இல்லாததால், ஒருவித வெறுமை வீட்டில் காணப்படுகிறது. எனவே, ஜிபி முத்துவுக்கு பதிலாக, தற்போது நடிகர் மன்சூர் அலி கானை கொண்டு வர, விஜய் டிவி முயற்சித்து வருகிறது என தகவல் பரவி வருகிறது.
ஏனெனில், வில்லன் நடிகராக இருந்தாலும் கலகலப்பாக பேசக்கூடியவர் மன்சூர் அலிகான். அதுமட்டுமின்றி அவரது நையாண்டித்தனமான பேச்சும், தெனாவெட்டை வெளிப்படுத்தும் அவரது உடல் மொழியும், தலை அசைப்பும் பார்வையாளர்களை வெகுவாக கவரும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், அவர் எந்த சர்ச்சைகளுக்கும் பயப்படாமல், தனது கருத்துகளை பொதுவெளியில் தைரியமாக வெளிப்படுத்தும் ஒரு கலைஞர் என்பதும் கவனிக்கத்தக்கது.
சர்ச்சைகளும், போட்டிகளும் நிறைந்த பிக்பாஸ் வீட்டுக்குள் மன்சூர் அலிகான் வரும் பட்சத்தில் இன்னும் நிகழ்ச்சியில் பலவிஷயங்கள் சூடுபிடிக்கும். சுவாரசியங்களும் அதிகரிக்கும். குறிப்பாக, மன்சூர் அலிகான் மூலம், நிகழ்ச்சியில் பரபரப்பும், விறுவிறுப்பும் பலமடங்கு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு, உருவாகி உள்ளது. இதனால், விஜய் டிவி தரப்பில் இருந்து, இதுபற்றி மன்சூர் அலிகானுக்கு தகவல் சென்றுள்ளது. ஆனால், அதற்கு அவருக்கே உரிய பாணியில் பதிலளித்து இருப்பதாக, தகவல் கசிந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து, மன்சூர் அலிகான் இப்படி பதில் அளித்து இருக்கிறார். "பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூத்தடிப்பது எனக்கு பிடிக்கவில்லை. நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, கண்டிப்பாக செல்ல மாட்டேன். அப்படி செல்வதாக இருந்தால் அங்கு நான்தான் பிக்பாஸாக இருப்பேன்" என கூறி இருக்கிறார்.
அவரது நிபந்தனையால் ஆடிப்போன விஜய் டிவி நிர்வாகம்,' நிகழ்ச்சியை இன்னும் விறுவிறுப்பாக்க வேண்டும் என்று இவரை, போட்டியாளர்களில் ஒருவராக நிகழ்ச்சிக்கு அழைத்தால், அடி மடியில் கைவைப்பது போல' பிக்பாஸ் ஆக வருகிறேன், என்று சொல்கிறாரே?... என பலத்த அதிர்ச்சியுடன், திரும்பியுள்ளது.