இன்று கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மலையாள படப்பிடிப்புகள் தொடங்கின
நோய் பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டும். முழுமையாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்;
கேரளாவில் கொரோனா பரவல் அதிகமானதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் சினிமா, டிவி ஆகியவற்றின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நிபந்தனைகளுடன் கேரளாவில் சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்க அரசு தீர்மானித்தது. அதன்படி உள்ளரங்குகளில் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் படப்பிடிப்புகள் நடத்த வேண்டும். 2 டோஸ் தடுப்பூசி எடுத்துகொண்டவர்கள் அல்லது ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும்.
நோய் பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டும். முழுமையாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று முதல் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மலையாள படப்பிடிப்புகள் தொடங்கின.