கேரளாவில் இயக்கிய முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே அதன் இயக்குநர் மரணம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பி.சேதுராஜன் . பல்வேறு மலையாளப் படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய இவர் முதல் முறையாக என்டே பிரியதாமம் என்ற படத்தை இயக்கினார்.
தான் இயக்கிய முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே, அதன் இயக்குநர் மரணமடைந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா, நாடு முழுவதும் பலருடைய வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த தொற்று சாதாரண மனிதர்களில் இருந்து பெரும் பணக்காரர்கள் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை. இந்த தொற்றுக்கு பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வர்களும் அதிகம். சினிமா துறையை சேர்ந்தவர்களும் ஏராளமாக இந்த தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பி.சேதுராஜன் (64). பல்வேறு மலையாளப் படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ள இவர், முதல் முறையாக, 'என்டே பிரியதாமம்' என்ற படத்தை இயக்கினார். பைனான்ஸ் பிரச்னை காரணமாக இந்தப் படம் திடீரென நின்றது. பின்னர் இரண்டு வருடங்களுக்கு முன், படம் முடிந்தது.
ஆனால், கொரோனா காரணமாக படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாமல் முடங்கியது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் வேலையில் அவர் இருந்தார். இந்நிலையில், அவருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தான் இயக்கிய முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே, சேதுராஜன் உயிரிழந்திருப்பது அவர்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் படக்குழுவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் சேதுராஜன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்