'சூர்யா 42' படத்தின் முக்கிய அப்டேட்.. முதன்முறையாக 13 கேரக்டர்
suriya 42 new update - சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
suriya 42 new update - தமிழ் சினிமாவின் பிரபலமான முகங்களான நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் வாடிவாசல் படத்தின் மூலம் இணைய உள்ளனர். வாடிவாசல் படம் குறித்து சில நாட்களுக்கு முன்பு, தயாரிப்பாளர்கள் படத்தை கைவிட திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் வெளிவந்தன. ஆனால் இதனை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மறுப்பு தெரிவித்தார்.
இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் என்வென்றால், சூர்யாவே தனது ரசிகர்களுக்கு தனிப்பட்ட முறையில் படம் தொடங்குவதாக உறுதியளித்துள்ளார். இதுகுறித்து நடிகர் சூர்யா தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் போட்டோஷூட்டில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, "வாடிவாசல் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனிமேட்டிக்காக ஒரு பிரபல வெளிநாட்டு நிறுவனத்திற்கு காட்சியை அனுப்பியுள்ளோம். படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்" என்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு 'சூர்யா 42' மற்றும் 'விடுதலை' படங்களுக்குப் பிறகு தொடங்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் 'சூர்யா 42' படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று தற்போது வெளியாகி சூர்யா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
actor suriya latest news updates in tamil
இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் எண்ணூர் துறைமுகத்தில் மிகவும் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு நடைபெற்றது. இதன்பின்னர் கோவாவில் படப்பிடிப்பு நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பின் அடுத்த ஷெட்யூல், கேரளாவில் விரைவில் துவங்கவுள்ளது. தொடர்ந்து 45 நாட்களுக்கு இரவில் மட்டுமே இந்த படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா இந்த படத்தில் முதன் முறையாக 13 கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்படுவதால், இப்படத்தில் நடிகர் சூர்யா அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் என ஐந்து கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் ஒரே நேரத்தில் எடக்க படக்குழுவினர் முடிவுசெய்துள்ளதாகவும், 10 மொழிகளில் 3டி படமாக உருவாகி வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.