50 கோடியைக் கடந்த வசூல்..! சுழன்றடிக்கும் மகாராஜா புயல்..!
இந்த படத்தின் வசூல் தற்போது 50 கோடியைத் தாண்டியுள்ளது.;
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி அளவுகடந்த வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் மகாராஜா. இந்த படத்தின் வசூல் தற்போது 50 கோடியைத் தாண்டியுள்ளது.
பெரிய நடிகர்களின் படங்களில் நடித்தால் அந்த படம் ஹிட்டாகிவிடும். சொந்தமாக ஹீரோவாக படம் நடித்தால் படம் புட்டுக்கும் என்ற அவப்பேச்சை எப்படியாவது மாற்ற வேண்டும் என நினைத்திருந்த விஜய் சேதுபதிக்கு இந்த படம் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது மகாராஜா.
கதாநாயகனாக மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து வரும் விஜய் சேதுபதி, வெகுநாட்களுக்கு பிறகு நல்ல படத்தைக் கொடுத்துள்ளார். முன்னதாக ஹிந்தி - தமிழில் வெளியான மெர்ரி கிறிஸ்மஸ் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. கடந்த ஜனவரியில் வெளியான இந்த திரைப்படத்தில் கத்ரீனா கெய்ப்புடன் இணைந்து நடித்திருந்தார் விஜய் சேதுபதி. நல்ல திரில்லர் படமான இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக தற்போது வெளியான மகாராஜா திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிஸிலும் மிகப் பெரிய வசூலைப் பெற்று வருகிறது. விஜய் சேதுபதி மீண்டும் அவரது ரூட்டைப் பிடித்துவிட்டார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
கடந்த வாரம் வெளியான மகாராஜா திரைப்படத்தை நித்திலன் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியுடன் நட்டி நடராஜ், அபிராமி, அனுராக் காஷ்யப், சிங்கம் புலி, பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அப்பாவுக்கும் மகளுக்கும் இடையேயான பாசப்பிணைப்பும், மகளுக்கு ஒரு பிரச்னை என்றால் எந்த எல்லைக்கும் போகும் தந்தை, ஒரு பெரிய பிரச்னையில் எதிரிகளை எப்படி கையாள்கிறான் என்பதே கதை.
குரங்கு பொம்மை எனும் படத்தின் மூலம் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்த நித்திலன் சாமிநாதன் இந்த படத்தை இயக்கி மீண்டும் ரசிகர்களிடையே தான் யார் என்பதை நிரூபித்திருக்கிறார். படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
வெளியாகி ஐந்து நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. இந்த ஆண்டில் வெளியான படங்களிலேயே மிகப்பெரிய வசூல் படமாக இது அமைந்துள்ளது. இந்த வார இறுதி முடிவில் நிச்சயம் 100 கோடி வசூலை எளிதில் எட்டும் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே விஜய் சேதுபதி தனியாக நடித்து எந்த பெரிய படமும் இந்த அளவுக்கு ஹிட் ஆகவில்லை.
கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த விக்ரம் படம்தான் தமிழில் அவரது பெரிய ஹிட் படமாக இருந்தது. விடுதலை படமும் சூரியை மையப்படுத்தியே இருந்தது. ஜவான் மற்றும் மும்பைகார் ஆகிய ஹிந்தி படங்களிலும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் அதிகம் பாராட்டப்பட்டது.
கடைசியாக வெளியான மெர்ரி கிறிஸ்மஸ் திரைப்படமும் விஜய் சேதுபதிக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இப்போது மகாராஜா திரைப்படம் அவரது 50 ஆவது படமாக அமைந்துள்ளது. இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் ஆகிவற்றுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதைப் போலவே படத்துக்கும் நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் அடுத்த இரண்டு வாரங்கள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக படம் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.