Maaveeran BO வேற லெவலில் வசூல் மழை செய்யும் சிவகார்த்திகேயன் படம்!
- சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படம் வசூல் மழை பொழிந்து வருகிறது.
- வசூலில் பட்டையைக் கிளப்பி வருகிறது மாவீரன்
- குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கிறது
- விஜய் சேதுபதியின் குரல் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது
;
தேசிய விருது வாங்குன இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்துல நம்ம சிவகார்த்திகேயன் நடிச்சிருக்குற மாவீரன் படம் பட்டி தொட்டியெல்லாம் வசூல் செஞ்சிட்டு இருக்கு. அதிதி, மிஷ்கின், சரிதானு எல்லார் நடிப்பும் பாராட்டப்பட்டுட்டு இருக்குற சமயத்துல மாவீரன் வசூல் பத்தி வர்ற நியூஸ் சிவகார்த்திகேயனுக்கு இன்னொரு பிளாக்பஸ்டர் பார்சல் னு சொல்ல வைக்குது. 4 நாள்ல இந்த படம் எவ்வளவு வசூல் செஞ்சிருக்குன்னு தெரியுமா? வாங்க பாக்கலாம்.
தமிழ் சினிமாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நட்சத்திரம் சிவகார்த்திகேயன். இவரது ஒவ்வொரு படங்களுக்கும் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது. சாதாரண கல்லூரி மாணவராக தனது வாழ்க்கைப் பயணத்தை தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக ஆரம்பித்தவர் அடுத்தடுத்து தனது கடின முயற்சியால் இன்று தமிழகத்தில் நம்பர் 1 நடிகர் இடத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.
ரஜினிகாந்த், விஜய்க்கு பிறகு இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். விரைவில் விஜய்க்கு போட்டியாக பல திரைப்படங்களை 100 கோடி வசூலில் சேர்ப்பார் என்று கூறப்படுகிறது. கடந்த டாக்டர், டான் என இரண்டு படங்களிலும் 100 கோடியைத் தொட்ட சிவகார்த்திகேயன், இந்த படத்திலும் அப்படி ஒரு சாதனையை நிகழ்த்துவார் போலிருக்கு.
ஆமாங்க.. திரும்பவும் ஒரு 100 கோடி படம் கொடுக்கப்போறாரு சிவகார்த்திகேயன். கிட்டத்தட்ட இந்த வாரம் முடியுறதுக்குள்ள 100 கோடி வசூலை எட்டிடும். கடந்த மூனு நாள்ல மட்டும் 50 கோடி ரூபாய் வசூல் செஞ்சிருக்கு மாவீரன். தமிழ்நாட்டுல மட்டும் நேத்து வரைக்கும் 32 கோடி ரூபாய் வசூலிச்சிருக்கு. இந்த வாரமும் பெரிய அளவுக்கு படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகப்போறது இல்லங்கறதால நிச்சயம் மாவீரன் பெரிய வசூல் சாதனைய படைக்கும். இது சிவகார்த்திகேயனோட ஆல்டைம் பெஸ்ட்டா அமையும்.
வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் என 4 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை பெற்றிருக்கிறது மாவீரன் திரைப்படம். இந்த வாரமும் பெரிய அளவில் வேறெந்த படங்களும் ரிலீஸ் இல்லை. மாமன்னன் படம் போட்டிருந்த திரையரங்குகளிலும் மெல்ல மெல்ல மாவீரன் படத்தை திரையிட ஆரம்பிக்கிறார்கள். இந்த வார இறுதியில் நிச்சயம் மாவீரன் படம் 100 கோடியைத் தாண்டும் என்று பலரும் கணித்திருக்கிறார்கள்.
Maaveeran box office collection worldwide in tamil
Maaveeran box office collection worldwide day 1 | முதல் நாள் கலெக்ஷன் உலகம் முழுவதும் - 10 கோடி ரூபாய்
Maaveeran box office collection worldwide day 2 | இரண்டாம் நாள் கலெக்ஷன் உலகம் முழுவதும் - 15 கோடி ரூபாய்
Maaveeran box office collection worldwide day 3 | மூன்றாம் நாள் கலெக்ஷன் உலகம் முழுவதும் - 20 கோடி ரூபாய்
Maaveeran box office collection worldwide day 4 | நான்காம் நாள் கலெக்ஷன் உலகம் முழுவதும் - 05 கோடி ரூபாய்
Maaveeran box office collection worldwide day 5 | ஐந்தாம் நாள் கலெக்ஷன் உலகம் முழுவதும் - xx கோடி ரூபாய்
Maaveeran box office collection worldwide day 6 | ஆறாம் நாள் கலெக்ஷன் உலகம் முழுவதும் - xx கோடி ரூபாய்
Maaveeran box office collection worldwide day 7 | ஏழாம் நாள் கலெக்ஷன் உலகம் முழுவதும் - xx கோடி ரூபாய்
Maaveeran box office collection worldwide day 8 | எட்டாம் நாள் கலெக்ஷன் உலகம் முழுவதும் - xx கோடி ரூபாய்