மாநாடு' படக்குழுவுக்கு பரிசு : சிம்பு சிறப்பு கவனிப்பு..!
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான 'மாநாடு' படத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்துள்ளார்.;
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்தனர்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான 'மாநாடு' படத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். அறிவிப்பு வெளியான நாள் முதலே இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் சிலம்பரசன் 'மாநாடு' படத்தில் பணியாற்றியவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். இப்படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு விலை உயர்ந்த கை கடிகாரத்தை பரிசாக வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார்.
அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் பரிசுகளையும் அளித்த நடிகர் சிலம்பரசனுக்கு படக்குழுவினர் அனைவரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.