மாரி செல்வராஜின் மகா சம்பவம்...! மாமன்னன் படம் எப்படி இருக்கு?

Maamannan Review in Tamil -மாமன்னன் திரைவிமர்சனம், ரேட்டிங், ரிவியூ படம் எப்படி இருக்கு உள்ளிட்ட விவரங்களைக் காண்போம்

Update: 2023-06-29 04:32 GMT

Maamannan Review in Tamil -தேவர் மகன் படத்தில் வரும் இசக்கிதான் இந்த மாமன்னன் என மாமன்னன் இசை வெளியீட்டில் பேசியிருந்தார் மாரி செல்வராஜ். இந்த படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், நேற்று இந்த படத்துக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் கமல்ஹாசன்.   மானுடர் அனைவரும் சமம்  என வாழ்ந்து வரும் தன்னைப் போலவே கொள்கை கொண்ட மாமன்ன திரைப்படத்துக்கு வாழ்த்துகள் என கமல்ஹாசன் அவர்கள் டிவீட் செய்திருந்தார். அதுபோல கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் தனித்தனியே பதிவிட்டிருந்தனர்.

உண்மையில் தேவர்மகன் படம் அளவுக்கு மாமன்னன் படம் இருக்கிறதா என்பதைக் காண பலரும் திரையரங்குக்கு சென்றிருந்தனர். அவர்களைப் படம் திருப்திப்படுத்தியதா? படத்தைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி கடந்த ஜூன் 29 ம் தேதி வெளிவந்த Maamannan Review in Tamil மாமன்னன் படம் எப்படி இருக்கு என்பது பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. மாமன்னன் திரைப்படத்தின் கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, விமர்சனம், வரவேற்பு Maamannan Review, Udhayanithi stalins, Direction, DOP, Music, Celebration உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது.

Maamannan Rating in Tamil

8 / 10

Maamannan Trailer

Full View

மாமன்னன் ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் டிஜிட்டல் உரிமை Maamannan OTT Release Date & Digital Streaming Rights

நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew

திரைப்படம் : மாமன்னன் (2023)

வகை : Genre

மொழி : தமிழ்

ரிலீஸ் தேதி : ஜூன் 29

இயக்குநர் : மாரி செல்வராஜ்

தயாரிப்பாளர் : உதயநிதி ஸ்டாலின்

திரைக்கதை : மாரி செல்வராஜ்

கதை : மாரி செல்வராஜ்

நடிப்பு : உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ்

இசை : ஏ ஆர் ரஹ்மான்

ஒளிப்பதிவு :

எடிட்டிங் :

தயாரிப்பு நிறுவனம் : ரெட் ஜெயண்ட் மூவிஸ்

-

மாமன்னன் படம் எப்படி இருக்கு? டிவிட்டர் தகவல்கள் | Maamannan Padam Eppadi Irukku ? Twitter Review

#Maamannan Review

FIRST HALF

Good👍

#Vadivelu & #FahadhFaasil Shine👌

#UdhayanidhiStalin & #KeerthySuresh are good too✌️

Making is effective✌️

#ARRahman's BGM🔥

Direction is on the point👍

Some scenes work very well👌

Writing Works👍

2nd Half Waiting✌️

#MaamannanReview

 

மாமன்னன் படம் எப்படி இருக்கு? | Maamannan Padam Eppadi Irukku ?

வடிவேலுவின் நடிப்பை காண விரும்புபவர்களுக்கு நல்ல வேட்டைதான். படம் முழுக்க வரும் வடிவேலுவின் கதாபாத்திரமும், வில்லனாக வரும் பஹத் பாசிலின் கதாபாத்திரமும் ரசிகர்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்க்க வைக்கிறது. பஹத் பாசில் யாருடைய குறியீடாக நிற்கிறார் என்கிற கேள்வி ஒவ்வொரு காட்சியிலும் வந்து செல்கிறது.

படத்தின் பாடல் காட்சிகள் பிரமாதமாக படம்பிடிக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டிருக்கின்றன. ஏ ஆர் ரஹ்மானின் பீட்டுக்கு ஏற்ற வகையில் எடிட்டிங் நல்ல திருப்தியானதாக இருக்கிறது. ஒளிப்பதிவு மாரி செல்வராஜின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது.

மாரி செல்வராஜ் கதை சொல்லியாக கலக்கிவிட்டார். ஆனால் திரைக்கதையில் மறுபடியும் வழக்கம்போல கோட்டைவிட்டுள்ளார். திரைக்கதை படத்துக்கானதாக இல்லாமல், அவர் கொண்ட அரசியலுக்காக எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும் வடிவேலுவும், பஹத் பாசிலும் கதையைத் தூக்கிச் செல்கின்றனர்.

உதயநிதிக்கு முக்கியமான கதாபாத்திரம் என்றாலும் மற்ற இருவருக்கும் ஸ்பேஸ் கொடுத்து தானும் நடிப்பேன் என அசத்தியிருக்கிறார். முதல் படத்திலிருந்து பார்த்து வந்த உதயநிதி தன் நடிப்பில் பெரிய முன்னேற்றம் காண முடிகிறது.

அரசியலைக் காண்பிக்கிறேன் என அழுகாச்சி வரவழைக்கும் காட்சிகளில் நம்மைப் போட்டு பிழிந்து எடுக்கிறார்கள். சில காட்சிகள் ஏன் படத்தில் வருகிறது என நம்மை நாமே கேள்வி கேட்டு பின் பின்தொடரும் வகையில் இருக்கிறது. ஆனாலும் ஒட்டுமொத்தமாக படம் திருப்தியளிக்கிறது. 10 முதல் 15 நிமிடங்கள் நறுக்கியிருக்கலாம் அல்லது பாடல் ஒன்றை குறைத்திருக்கலாம். முக்கியமாக இரண்டாவது பாதியில் கவனம் செலுத்தி எடுத்திருந்தால் இன்னமும் படம் அருமையானதாக வந்திருக்கும்.

படத்தைக் காண மூன்று முக்கியமான காரணங்கள்

வடிவேலு

பஹத் பாசில்

ஏ ஆர் ரஹ்மான்

மாமன்னன் திரைப்படம் தேவர்மகன் இசக்கியின் கதை மாதிரியா இருக்கிறது என்றும், இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத நிலையில், பட விளம்பரத்துக்காக சொல்லியிருப்பாரோ மாரி என பலரும் பேசிச் சென்றதைக் காண முடிந்தது.

-

மாமன்னன் கதைச் சுருக்கம் | Maamannan Story Explained

விரைவில் அப்டேட் செய்யப்படும்

மாமன்னன் ஓடிடி ரிலீஸ் தேதி Maamannan OTT Release Date

திரைப்படம் கடந்த ஜூன் 29 தேதி வெளியாகியுள்ளது. வரும் OTT Date Release தேதி நெட்பிளிக்ஸ் Netflix ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்கில் வெளியான நாள் : ஜூன் 29

சாட்டிலைட் உரிமை : Kalaingar TV | கலைஞர் டிவி

டிஜிட்டல் உரிமை : Netflix | நெட்பிளிக்ஸ்

ஓடிடி ரிலீஸ் தேதி : OTT Date Release

-

மாமன்னன் OTT: FAQ

மாமன்னன் ரிலீஸ் ஆகிவிட்டதா? Is Maamannan out?

ஆம். மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

மாமன்னன் படம் வெற்றிப்படமா? தோல்விப்படமா? Is Maamannan hit or flop?

மாமன்னன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மாமன்னன் படத்தின் இயக்குநர் யார் ? Who is director of Maamannan ?

மாரி செல்வராஜ் மாமன்னன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



 

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News