ஒன்பது பேருடன் காதல்… ஒருவரையும் திருமணம் புரியவில்லை… ஏன்..? சுஷ்மிதா சென் பதில்..!
நடிகை சுஷ்மிதா சென், தன் வாழ்வில் ஏன் ஒருவரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதை ஒரு நிகழ்ச்சியில் தெளிவுபடுத்தினார்.
மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை 1994-ம் ஆண்டு வென்று உலக அழகியாக வலம் வந்தவர் நடிகை சுஷ்மிதா சென். தொடக்கத்தில் இந்திப் படங்களில் அதிகமாக நடித்து வந்த சுஷ்மிதா சென், நடிகர் நாகார்ஜுனா நாயகனாக நடித்த 'ரட்சகன்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார்.
தற்போது இரண்டு வளர்ப்பு மகள்களுடன் வாழ்ந்து வரும் சுஷ்மிதா சென்னுக்கு அவரது வாழ்க்கையில், அவருக்கு காதலர்களாக வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களில் இயக்குநர் விக்ரம் பட், நடிகர் ரந்தீப் ஹூடா, பன்டி சச்தேவ், இம்தியாஸ் காத்ரி, முடாசர் அஸீஸ், சமீர் பாட்டியா, சஞ்சய் நரங், ரிதிக் பாஷன், ரோஹ்மன் சால் ஆகிய குறிப்பிட்ட ஒன்பது பேருடன் காதலியாக வாழ்ந்து வந்தார் சுஷ்மிதா சென்.
இவர்களில், இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் சுஷ்மிதா சென்னைவிடவும் 10 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், முன்னணி இந்தி நடிகையாக வலம் வந்த டுவிங்கிள் கண்ணா தொகுத்து வழங்கும் 'தி ஐகான்ஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சுஷ்மிதா சென், "அதிர்ஷ்டவசமாக எனது வாழ்வில் நான் சில சுவாரஸ்யமான ஆண்களை சந்தித்துள்ளேன். ஆனால், அவர்களால் நான் ஏமாற்றம் அடைந்தேன். இதன் காரணமாக, நான் திருமணம் செய்து கொள்ளவில்லை.
எனது குழந்தைகளுக்கு இதில் துளியளவும் தொடர்பு இல்லை. என் வாழ்க்கையில் வந்து சென்ற நபர்களை எனது குழந்தைகள் இருவரும் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மரியாதையும், அன்பையும் அளித்துள்ளனர். அதை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்.
மூன்று முறை நான் திருமணம் செய்துகொள்ளும் சூழல் உருவானது. மூன்று முறையும் கடவுள் என்னை காப்பாற்றினார். அவர்களுடன் நான் சந்தித்த சிக்கல்களை என்னால் வெளியில் சொல்ல முடியாது. கடவுள் இந்த இரண்டு குழந்தைகளையும் பாதுகாத்து வருகிறார்…" என்று நெகிழ்ந்து பேசினார் சுஷ்மிதா சென்.