மூன்று லட்சம் லைக்குகளை அள்ளிய காதல் ததும்பும் நயன் - விக்கி புகைப்படம்..!

இயக்குநர் விக்னேஷ் சிவன், தானும் நயன்தாராவும் சேர்ந்துள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Update: 2022-07-04 11:38 GMT

3 லட்சம் லைக்குகளை அள்ளிய நயன்-விக்கி போட்டோ. 

ஜூன் 9-ல் விழிகளை வியக்க வைத்த பிரமாண்ட திருமணம்… அடுத்து திருப்பதி ஏழுமலையான் தரிசனம்… பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், ரசிகர்கள் சந்திப்பு… தாய்லாந்தில் தேன்நிலவு … என திருமண தித்திப்பு நினைவுகளின் தொடர்ச்சியாக பாலிவுட் பாட்சா ஷாருக்கானுடன் அட்லி இயக்கத்தில் 'ஜவான்' இந்திப் படப்பிடிப்பில் திருமணத்துக்குப் பிறகான முதல் படப்பிடிப்பாக அதில் கலந்து கொண்டார் நயன்தாரா.

எல்லாம் திட்டமிட்டபடி மகிழ் நிறை தருணங்களோடு விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை திருமணம் செய்த பின்னர் 'நான் பிறந்த தினமே' என்ற பாடலின் வரியை கேப்ஷனாகப் பதிவு செய்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இந்தப் புகைப்படத்தில் விக்னேஷ் சிவனை நயன்தாரா இருக்கக் கட்டி அணைத்தவாறான நிலையில் உள்ள இந்தப் புகைப்படத்திற்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது .

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளைக் கேப்ஷனாகக் கொண்டு தொடர்ந்து விக்னேஷ் சிவன் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், அடுத்து, என்ன புகைப்படத்தை வெளியிடப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News