தளபதி 67 லியோ ஆரம்பிச்சிட்டாருய்யா நம்ம மிஷ்கின்! இனி அனல் பறக்கும்!

அடுத்த மாதம் சஞ்சய் தத், விஜய் இடையிலான காட்சிகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. வரும் அக்டோபர் 19ம் தேதி லியோ படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.;

Update: 2023-02-24 13:02 GMT

விஜய்யுடன் சண்டையெல்லாம் போட்டேன் என ஓபனாக கூறிய மிஷ்கின் தற்போது காஷ்மீரில் லியோ படக்குழுவுடன் இணைந்துள்ளார். அவரின் காட்சிகள் இன்று முதல் படமெடுக்கப்படுகின்றன.

ஜனவரி மாதம் துவக்கத்திலேயே பட பூஜை போட்டு ஆரம்பிக்கப்பட்ட லியோ திரைப்படத்தில் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, கௌதம் மேனன் ஆகியோருக்கான காட்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்துள்ளது. இத்தனை நாட்கள் சண்டைக் காட்சிகளும் ஷூட் செய்யப்பட்டிருக்கின்றன.

லியோ படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பிலேயே மிஷ்கினுக்கும் விஜய்க்கும் இடையிலான சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதனை மிஷ்கின் தான் கலந்துகொண்ட ஒரு கல்லூரி விழாவில் பொத்தம் பொதுவாக மேடையிலேயே போட்டு உடைத்துவிட்டார். இதனால் லோகேஷ் கனகராஜ், விஜய் ஆகியோருக்கும் மிஷ்கின் மேல் வருத்தம் இருந்தாலும் அதனை அவரது கவர்ந்திழுக்கும் பேச்சால் சமாளித்துவிட்டாராம்.

இனிமேல் இதுபோன்று பேசமாட்டேன் பொதுவெளியில் என்னிடம் தளபதி விஜய் தம்பி குறித்து கேட்டதால் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன், தம்பியுடன் நான் எனது ஆரம்ப கால இயக்குநர் வாழ்க்கையில் இருந்துள்ளேன். அந்த பூரிப்புதான் என்று கூறி சமாளித்தாராம்.

இந்நிலையில், இன்றுமுதல் மிஷ்கின் கலந்து கொள்ளும் படக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மிஷ்கின் இடையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்த படத்தின் ஷூட்டிங்கும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றது. இத்தனை நாள் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் நடித்த மிஷ்கின், இன்று முதல் லியோ படக்குழுவுடன் இணைந்துள்ளார். லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மிஷ்கின்.

அடுத்த மாதம் சஞ்சய் தத், விஜய் இடையிலான காட்சிகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. வரும் அக்டோபர் 19ம் தேதி லியோ படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விஜய்க்கும் திரிஷாவுக்கும் காட்சிகள் குறைவாகத் தான் இருக்கிறதாம். திரிஷாவும் இந்த படத்தில் சண்டைக் காட்சிகளில் நடிக்கிறாராம். மேலும் பிரியா ஆனந்த் இந்த படத்தின் முக்கியமான திருப்பு முனைக்கு காரணமாக அமைகிறார் என்றும், மிஷ்கின் படம் முழுக்க வருகிறார் என்றும் கூறப்படுகிறது. 

Tags:    

Similar News