லிங்கா பட நாயகிக்கு திருமணம்! மாப்பிள்ளை இவரா?
கடந்த ஒரு வருடமாக லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருந்து வரும் சோனாக்ஷி, ஹிந்தி நடிகர் ஜாஹீர் இக்பாலை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறாராம்.;
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள்.
தமிழ் திரையுலக ரசிகர்களைப் பொறுத்த அளவில் இவர் லிங்கா படத்தில் சூப்பர் ஸ்டார் ஜோடியாக நடித்தவர். தமிழில் எந்த மொழி நடிகை நடித்தாலும் அவர்களுக்கு வரவேற்பு கொடுப்பதில் எந்த குறைவும் இல்லாமல் தரமாக செய்வார்கள். அந்த அளவுக்கு குஷ்பு, நக்மா தொடங்கி நயன்தாரா, மமிதா பைஜு என இப்போது வரையில் அனைவருக்கும் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள்.
சூப்பர் ஸ்டார் ஜோடியாக லிங்கா படத்தில் நடித்திருந்தார் சோனாக்ஷி சின்ஹா. இவர் லிங்கா படத்தில் நடித்த தாத்தா கதாபாத்திரத்தில் வரும் லிங்கேஷ்வரனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் 2014ம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியானது. அதீத எதிர்பார்ப்புகளுடன் வெளியானாலும் படம் படுமொக்கையாக இருந்ததால் படம் ஒரே நாளில் மண்ணைக் கவ்வியது.
படத்தில் ரஜினிகாந்த் இருந்ததால் படம் ஓரளவு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. ஆனால் சரியாக போகாத இந்த படத்துக்கு பிறகு கே எஸ் ரவிக்குமாரின் மார்க்கெட் அப்படியே இறங்கியது. அவர் அந்த படத்துக்கு பிறகு படமே இயக்காமல் நிறுத்திக்கொண்டார்.
சோனாக்ஷி சின்ஹா இந்த படத்துக்கு பிறகு தமிழில் தலைகாட்டவே இல்லை. பாலிவுட்டில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தவர், அக்ஷய் குமார், சல்மான் கான், சைஃப் அலிகான், சாகித் கபூர் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில், சோனாக்ஷி சின்ஹா தற்போது காதலித்து வருவதாக தகவல் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஒரு வருடமாக லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருந்து வரும் சோனாக்ஷி, ஹிந்தி நடிகர் ஜாஹீர் இக்பாலை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறாராம். வரும் ஜூன் 23ம் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
சோனாக்ஷி சின்ஹாவின் அப்பா சத்ருகன் சின்ஹாவும் ரஜினிகாந்தும் நண்பர்கள். இதனாலேயே சோனாக்ஷியை தன்னுடன் ஜோடிாயாக நடிக்க வைத்தார். அதேநேரம் இவர்களுக்கு இடையில் காதல் காட்சிகள் வரும்போது ரஜினிகாந்த் ரொம்பவே தயங்கியுள்ளார். அதற்கு காரணம் நண்பரின் மகளிடம் நெருங்கி நடிப்பது எப்படி அவர் என்ன நினைப்பாரோ என்று தயங்கியதாக அவரே தெரிவித்துள்ளார்.