தோனியின் லெட்ஸ் கெட் மேரீட் அறிவிப்பு
தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படமான ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.;
பைல் படம்.
தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் 'எல்.ஜி.எம்'(லெட்ஸ் கெட் மேரீட் ) திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சாக்ஷி சிங் தோனி கலந்து கொண்டார்.
அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் 'எல்.ஜி.எம்' (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இந்த திரைப்படத்தை தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
நிகழ்ச்சியில் சாக்ஷி சிங் தோனி பேசுகையில், "நாங்கள் எங்களுடைய குழுவுடன் இங்கேயிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இது போன்ற அர்த்தமுள்ள கதைகள் வழங்குவதற்கும் ஆவலுடன் தயாராகயிருக்கிறோம்" என்றார்.