ரஜினிக்கே கிடைக்கல.. விஜய்க்கு குடுத்துடுவாங்களா! வைரலாகும் தயாரிப்பாளர் பேச்சு!

லியோ படத்துக்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்காது என பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-09-16 07:47 GMT

தளபதி விஜய்யின் லியோ படத்துக்கு அதிகாலை காட்சி கிடைக்காது என பிரபல தயாரிப்பாளர் ஒருவர் சில வாரங்கள் முன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மிகவும் கடுப்பாகியுள்ள அவர்கள் விஜய்க்கு அரசியல் ரீதியாக அழுத்தம் தருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

  • லியோ படத்தின் மாபெரும் எதிர்பார்ப்பின் காரணமாக பிசினஸ் மட்டுமே ரூ. 434 கோடிக்கும் மேல் நடந்துள்ளது.
  • லியோ படத்திற்கு 4AM காட்சி கிடைக்காததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
  • அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • 4AM காட்சி கிடைக்காததால், படத்தின் முதல் நாளைய வசூல் பாதிக்கப்படலாம் என்று சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் திரைப்படம் லியோ. தளபதி விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். லலித் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையில் விஜய் படம் என்பதால் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் நிலை இருந்தது ஆனால் படத்தில் மொத்தமே 2 பாடல்கள்தானாம். ஆனால் இதை கேட்டதும் இசை உரிமம் பெற்ற நிறுவனம் ஷாக் ஆகியுள்ளது. ஆனால் படத்தில் ஏகப்பட்ட பிஜிஎம்கள், டிராக்குகள் இருப்பதாக கூறி சமாதானம் செய்திருக்கிறார்கள்.

இப்படத்தின் மாபெரும் எதிர்பார்ப்பின் காரணமாக பிசினஸ் மட்டுமே ரூ. 434 கோடிக்கும் மேல் நடந்துள்ளது என கூறப்படுகிறது. இந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், விஜய்யின் லியோ படத்திற்கு 4AM அதிகாலை காட்சி கிடைக்கும் என ரசிகர்கள் நினைத்தனர். தளபதி படம் ரிலீஸ் தேதிதான் நமக்கு தீபாவளி என நினைத்து கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு பேரிடியாக வந்து விழந்தது இந்த செய்தி. காரணம் அதிகாலை காட்சி கிடைக்காது என்பதோடு நிற்காமல் 9 மணிக்கும் காட்சி நடக்காது முதல் காட்சியே 11 மணிக்கு தான் என்பது மிகவும் அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது.

அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் பேசியுள்ளார். இவர் அளித்த பேட்டி ஒன்றில், "லியோ படத்திற்கு அதிகாலை 4AM காட்சி இல்லை. ரஜினியின் ஜெயிலர் படத்திற்கே கிடைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

மேலும், "அதுவும் சன் பிச்சர்ஸ் அரசுக்கு நெருக்கமான தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வந்த படத்திற்கே அதிகாலை 4AM மணி காட்சி கிடைக்கவில்லை. இதனால் லியோ படத்திற்கு காலை 11.30 மணி காட்சி தான் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லியோ படத்திற்கு 4AM காட்சி கிடைக்காதது ஏன் என்பதை அறிய ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, "ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு 9AM காட்சி கிடைத்ததால், விஜய்யின் லியோ படத்திற்கும் 9 மணி காட்சியாவது அனுமதிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4AM காட்சி கிடைக்காததால், லியோ படத்தின் முதல் நாளைய வசூல் பாதிக்கப்படலாம் என்று சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர். அதிகாலை காட்சியில் பெரும்பாலும் ரசிகர்கள்தான் வந்து பார்த்து செல்வார்கள் என்பதால் படத்தைப் பற்றிய நல்ல விமர்சனம் வெளிவரும். அதுமட்டுமின்றி அதிகாலையில் படம் பார்த்துவிட்டு அன்றைய தினம் வேலைக்கு, கல்லூரிக்கு செல்பவர்களும் இருப்பார்கள். ஆனால் காலை 11 மணிக்குதான் காட்சி என்பதால் ஒரு பகுதியினர் படத்தை இரவு அல்லது வார இறுதி விடுமுறைக்கு பார்க்கலாம் என ஒத்திவைத்துவிடுவார்கள்.

ஒருவேளை 11 மணிக்கு பொதுமக்கள் படத்தைப் பார்த்துவிட்டு நெகடிவ் கமெண்ட் வேர்ட் ஆஃப் மவுத் வழியாக பரவிவிட்டால், அடுத்து தொடர்ந்து படத்திற்கான வரவேற்பு குறையும் இதனால் வசூல் சரியும் என கூறுகிறார்கள்.

லியோ படத்திற்கு 4AM காட்சி கிடைக்காதது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவால் படத்தின் வசூல் பாதிக்கப்படுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News