Leo update இப்படியே போனா பாபாவுக்கு உண்டான கதிதான் லோகேஷ்! எச்சரித்த பிரபலம்

தொடர்ந்து பல அப்டேட் கொடுத்து பாபா கதை போல் ஆகிவிட போகிறது என லோகேஷ் கனகராஜை எச்சரித்துள்ளார் பிரபல பத்திரிகையாளர் ஒருவர்;

Update: 2023-02-28 16:08 GMT

பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜை எச்சரித்திருக்கிறார். இப்படியே போய்க்கொண்டிருந்தால் ரஜினி நடிப்பில் உருவான பாபாவுக்கு கிடைத்த வரவேற்பு மாதிரிதான் லியோ படத்துக்கும் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

தளபதி 67 படத்துக்கு லியோ என்று பெயர் வைத்ததிலிருந்து காஷ்மீர் சென்ற படக்குழு பட்டியல், காஷ்மீரில் கேங்ஃபயர், ரத்னகுமார் குடுத்த அப்டேட் என வாரம் ஒரு அப்டேட் கொடுத்து வருகிறது லியோ படக்குழு. இதற்கிடையில் மிஷ்கினும் ஒரு அப்டேட் கொடுத்து அடுத்தடுத்து லியோ குறித்தே பல விசயங்களைப் பேச வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

படத்தில் இருக்கும் சுவாரஸ்யங்கள் வெளியில் சொன்னால் கூட பரவாயில்லை இல்லாததையும் வெளியிட்டு ரசிகர்களை குழப்புவதை செய்யக்கூடாது. அப்படி செய்தால் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா படத்தின் ரிசல்ட்தான் லியோ படத்துக்கும் கிடைக்கும் என எச்சரித்திருக்கிறார் பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி.

படத்தின் கதையில் நம்பிக்கை இருந்தால் அது தானாகவே வெற்றி பெறும். நல்ல கதையும் சரியான திரைக்கதையும் அமைந்தாலே போதும் அதில் நீங்கள் கைதேர்ந்தவராக இருந்தால் எளிதில் ஆடியன்ஸ் பல்ஸ் பிடித்து சிக்சர் அடிக்கலாம் ஆனால் லோகேஷ் கனகராஜோ அல்லது அவர் சம்பந்தப்பட்டவர்களோ லியோ பற்றி கொடுக்கும் அப்டேட் ரசிகர்களை குழப்புவதாக அமைந்து வருகிறது.

பாபா படத்தில் இப்படித்தான் அதீத எதிர்பார்ப்பு நிலவி வந்தது. படம் வெளியான முதல் நாள் தமிழகம் முழுக்க ரஜினி ரசிகர்கள் அடித்து பிடித்து திரையரங்கில் மோதி உள்ளே சென்று போய் உக்கார்ந்தா பாதி படத்திலேயே வெளியேறிய நிலையும் ஏற்பட்டது. இப்படியே அதிக அப்டேட் கொடுத்து அதீத எதிர்பார்ப்புகளை உருவாக்கி விடாதீர்கள். இதனால் படத்தின் ரிசல்ட்தான் அடிவாங்கும் என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News