சென்னை திரும்பிய லியோ படக்குழு! நெக்ஸ்ட் ரெஸ்ட்டு?

சென்னை திரும்பிய பிறகு 10 நாட்களில் அடுத்த ஷெட்யூல் துவங்குகிறது. அது ஹைதராபாத்தில் நடக்கும் எனவும் அதற்காக மிகப் பெரிய ஏர்போர்ட் செட் போடப்பட்டு வருகிறதாம். இந்த ஷெட்யூலில் விஜய், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரும் இந்த காட்சியில் இருக்கிறாராம்.;

Update: 2023-03-23 07:30 GMT

லியோ படப்பிடிப்பிலிருந்து வெளியேறி விஜய் சென்னைக்கு திரும்பியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதனால் லியோ படப்பிடிப்பு முடிந்துவிட்டதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டது எனவும் இன்று படக்குழுவினர் சென்னை திரும்புகிறார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது லியோ திரைப்படம். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரிக்க, அனிருத் இசையில் படம் ஜெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது.

தயாரிப்பாளர்களின் ஃபேவரைட் இயக்குநரான லோகேஷ் தலைமையில் சென்னை, கொடைக்கானல் ஷெட்யூல்களை முடித்துக் கொண்டு கடந்த ஜனவரி மாதம் காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டது லியோ படக்குழு.


விஜய், திரிஷா, அர்ஜூன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். முதலில் மிஷ்கின் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு அவரை பேக்அப் செய்து அனுப்பியது படக்குழு. அவரும் படத்தைப் பற்றியும் லோகேஷ் கனகராஜ், விஜய் ஆகியோரைப் பற்றி புகழ்ந்து டிவீட் செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து கௌதம் மேனன் காட்சிகள் படமாக்கப்பட்டது.

கௌதம் மேனனைத் தொடர்ந்து அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரின் காட்சிகள் மட்டும் பாக்கி இருப்பதாக கூறப்பட்டது. மன்சூர் அலிகான் காட்சிகள் ஏற்கனவே கொடைக்கானலில் எடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட நிலையில், இன்றுடன் மொத்தம் காஷ்மீர் ஷெட்யூலும் முடிந்து சென்னை திரும்புகிறது படக்குழு. இதனிடையே நேற்றே நடிகர் விஜய் சென்னை திரும்பிவிட்டதாகவும் அதற்கு ஆதாரமாக சென்னை விமான நிலையத்தில் விஜய் வரும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக நேற்று காஷ்மீரில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை திரும்பிய பிறகு 10 நாட்களில் அடுத்த ஷெட்யூல் துவங்குகிறது. அது ஹைதராபாத்தில் நடக்கும் எனவும் அதற்காக மிகப் பெரிய ஏர்போர்ட் செட் போடப்பட்டு வருகிறதாம். இந்த ஷெட்யூலில் விஜய், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரும் இந்த காட்சியில் இருக்கிறாராம்.


23 ம் தேதி சென்னை திரும்பும் லியோ படக்குழு அடுத்து 10 நாட்கள் ஓய்வெடுக்கிறது. காஷ்மீரில் கடும் குளிரில் இருந்தவர்கள் இப்போது சென்னையில் சில தினங்கள் ஓய்வெடுக்க தயாரிப்பு தரப்பே அனுமதி அளித்துள்ளதாம். அதேநேரம் திரிஷா பொன்னியின் செல்வன் 2 புரமோசனுக்கு செல்கிறார். ஏற்கனவே சொன்னது போல ஹைதராபாத் செட் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறதாம். 40 நாட்களில் முழு செட்டையும் போட டைம் கேட்டிருக்கிறார்களாம். ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு துவங்கி, ஹைதராபாத் ஷெட்யூலை முடித்துவிட்ட அடுத்த ஷெட்யூலுக்கு சென்னையில் 1 வாரம் திட்டமிட்டிருக்கிறார்களாம். அத்துடன் படமும் முடிவடைய இருக்கிறது என்கிறார்கள். 

Tags:    

Similar News