வெளிநாடுகளில் வசூலை வாரி குவிக்கும் லியோ!

வெளிநாடுகளில் வசூலை வாரி குவிக்கும் லியோ! முதல் நாள் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

Update: 2023-10-20 04:30 GMT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் லியோ படத்தின் முதல் நாளிலேயே 120 கோடி வசூலைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அதாவது உலகம் முழுவதும் முதல் நாளிலேயே 120 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சரிபாதி அளவில் வெளிநாடுகளில் திரையிட்ட காட்சிகள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது என கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் அதிக எதிர்பார்ப்பு கொண்ட படங்களில் நேற்று வெளியாகியுள்ள லியோவும் ஒன்று. தமிழகம் தவிர்த்த இடங்களில் அதிகாலை 4 மணிக்கே வெளியாகி திரைப்படம், தமிழகத்தில் 9 மணிக்கு பிறகுதான் திரைப்படத்தின் முதல் காட்சி வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்ற படத்துக்கு, பலத்த எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்திருக்கின்றனர்.

உலக அளவில் முதல் நாள் வசூல்

இந்நிலையில் படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் மட்டுமே 100 கோடி ரூபாயைத் தாண்டியிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. ஒட்டுமொத்தமாக 120 கோடி ரூபாய் வசூலைப் பெற்றிருக்கிறது. இதில் உலக அளவில் இந்த தவிர்த்த நாடுகளில் மட்டும் 60 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறதாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், திரிஷா, கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த படத்துக்கு இசை அனிருத், ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா, படத்தொகுப்பு ஃபிலோமின் ராஜ்.

மாஸ்டர் திரைப்படத்துக்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படமும் கைதி - விக்ரம் யூனிவர்ஸில் இருக்குமா இல்லையா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் எழுந்துள்ளது. இதனால் இந்த படத்துக்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும் ஆர்வமாக காத்திருந்தார்கள்.

முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடவேண்டும் என்று தமிழகத்தில் 9 மணிக்கு காட்சி நேரம் என்றால் 7 மணிக்கே திரையரங்குகளில் கூடி அமர்க்களப்படுத்திவிட்டனர் ரசிகர்கள். இதுமட்டுமின்றி தமிழகத்தில் பார்த்தால் நேரமாகிவிடும் என நேற்றே பெங்களூரு போன்ற பக்கத்து மாநிலத்திலிருக்கு நகரங்களுக்கு பயணமாகி அதிகாலையிலேயே படத்தைப் பார்த்துவிட்டு திரும்புகின்றனர்.

படம் நல்ல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி அதோடு விட்டுவிடாமல் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. படத்தில் அதிக வன்முறை இருப்பதாக சொல்லப்பட்டாலும் இது ஆக்ஷன் படம் என்பதால் நிச்சயமாக அதனை விரும்பும் ரசிகர்களே திரையரங்குக்கு செல்வார்கள் என லோகேஷ் கனகராஜ் சொல்லியிருப்பதை நினைவுகூர்வோம்.

படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ் தருணங்கள் இருப்பதாக படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர். படம் எல்சியூவில் இருக்கிறதா இல்லையா என்பதை ரசிகர்கள் பார்த்து தெரிந்துகொள்ளட்டும் என விட்டுவிட்டார்கள். படத்தில் கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோருக்கு மிகவும் வலிமையான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 1 | Leo box office worldwide Day 1 - 120 கோடி ரூபாய்

லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 2 | Leo box office worldwide Day 2

லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 3 | Leo box office worldwide Day 3

லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 4 | Leo box office worldwide Day 4

லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 5 | Leo box office worldwide Day 5

லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 6 | Leo box office worldwide Day 6

லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 7 | Leo box office worldwide Day 7

லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 8 | Leo box office worldwide Day 8

Tags:    

Similar News