லீக் ஆன லியோ இன்ட்ரோ! அதிர்ச்சியில் படக்குழு..!

லியோ படத்தின் ஆரம்ப காட்சி இணையதளத்தில் லீக் ஆகிவிட்டதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.;

Update: 2023-10-18 15:00 GMT

லியோ படம் உலகம் முழுக்க நாளை வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் துவக்க காட்சி லீக் ஆகியுள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த வாரம் வெளியாக இருக்கும் லியோ படத்துக்கு பிரச்னை மேல் பிரச்னை வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிகாலை காட்சிகள் ரத்து என்பது ரசிகர்களுக்கு பேரிடியாக வந்து விழுந்துள்ளது. இதற்காக தயாரிப்பு தரப்பு நீதிமன்றத்தை நாடியது. ஆனால் நீதிமன்றமும் 4 மணி காட்சிக்கு உத்தரவிடமுடியாது என கையை விரித்துவிட்டது.

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் நடைபெற இருந்தது. விழா ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்த நிலையில், கடைசி நேரத்தில் விழா கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

முன்னதாக படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள், வன்முறைக் காட்சிகள் இருப்பதாக கூறி பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

சரி லியோ ஆடியோ லாஞ்ச் தான் நடக்கவில்லை டீசர் வருமா என எதிர்பார்க்கப்பட்டபோது அது வரவே இல்லை. ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடையும் வகையில் டிரைலரை திடீர் சர்ப்ரைஸாக வெளியிட்டது படக்குழு.

அந்த டிரைலரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியதையும் பலர் எதிர்த்தனர். இது படத்துக்கு நெகடிவ் பப்ளிசிட்டியாக அமையும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதையும் மீறி படத்துக்கான ஹைப் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அடுத்து அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அரசிடம் பேசி எப்படியாவது 4 மணி காட்சியைப் பெறுவது அல்லது குறைந்தபட்சம் 7 மணி காட்சியையாவது அனுமதிக்க கோருவது என படத் தயாரிப்பு தரப்பு போராடியது. ஆனால் 9 மணி இறுதி என முடிவு எட்டியது.

இந்நிலையில் தெலுங்கு பதிப்பில் லியோ எனும் பெயருக்கு பிரச்னை எழுந்துள்ளதாக கூறப்பட்டது. ஏற்கனவே புரமோசன் பணிகள் எதுவும் செய்யவில்லை என ரசிகர்கள் கடுப்பாகி இருந்த நிலையில், படத்தின் பெயரை மாற்ற தெலுங்கு திரையுலகம் வலியுறுத்தியதால் மேலும் கடுப்பாகிவிட்டனர்.

இந்நிலையில் நாளை காலை படம் திரைக்கு வர இருக்கும் இந்த நிலையில், படத்திலிருந்து ஓபனிங் காட்சி மட்டும் லீக் ஆகி அதிர்ச்சியளித்துள்ளது. 

Tags:    

Similar News