லியோ படம் எப்படி இருக்கு? இவங்களே சொல்லிட்டாங்களா?

லியோ படத்தின் ரிவீயூ ஒன்று வெளியாகியுள்ளது. இதை ஹிந்தி திரையுலகில் இருந்து வெளியிட்டிருக்கிறார்கள்.

Update: 2023-10-18 16:15 GMT

லியோ படம் எப்படி இருக்கு என ஹிந்தி பட உலகில் இருந்து ஒரு ரிவியூ வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் உருவாகியுள்ள லியோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படம் எப்படி இருக்கப் போகிறது என அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரங்களே இருப்பதால் படத்தை முதல் நாள் முதல் காட்சியிலேயே பார்த்து ரசிக்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

லியோ படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. மாஸ்டர் படத்துக்கு பிறகு இந்த படத்தில் இரண்டாவது முறையாக விஜய்யை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். மேலும் இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா, கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மிஸ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இதுவரை 3 பாடல்கள் படத்திலிருந்து வெளியாகியுள்ளன.

ஒட்டுமொத்தமாக லியோ படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. வரும் 19ஆம் தேதி படம் வெளியாகும் போது எப்படிப்பட்ட விமர்சனம் கிடைக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஹிந்தி பெல்ட்

கமல்ஹாசன் தயாரித்து நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்துக்கு ஹிந்தி உலகம் வரை சென்று புரமோட் செய்தும் பெரிய அளவில் வசூல் குவிக்க முடியவில்லை. ஹிந்தி பெல்டில் கமல்ஹாசனுக்கு சாதாரணமாக இருக்கும் வெயிட்டேஜ் கூட விக்ரம் படத்துக்கு வரவில்லை. இதனால் லியோ படத்துக்கு எப்படி என யோசித்துக் கொண்டிருந்தனர் ரசிகர்கள்.

ஆனால் அவர்களை அசரடிக்கும் வகையில் ஹிந்தி ஆடியன்ஸுக்கும் இந்த படம் பிடிக்கும் எனவும், ஒரு நிமிடம் கூட தவற விட்டுவிடாதீர்கள். இந்த படத்தில் நடித்ததற்கு விஜய்யே பெருமைப்படுவார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அசத்தும் அனிருத்

கோயம்புத்தூரில் ஒரு கல்லூரி விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ் படத்தில் 2 பாடல்கள் மட்டுமே இருப்பது போல பேசியிருந்தார். அதனால் இந்த படம் வழக்கமான விஜய் படங்கள் போல் இல்லாமல் ராவாக இருக்கும் என்று பேசப்பட்டது. ஆனால் இப்போது படத்தில் முக்கியமான இடங்களில் 3 மாண்டேஜ் பாடல்களைச் சேர்த்திருக்கிறார்கள். இதனுடன் சேர்த்து மொத்தம் 5 பாடல்கள் படத்தில் இருக்கின்றன.

அதில் நா ரெடிதான் வரவா, பேட் ஆஸ், அன்பெனும் ஆயுதம் என்று 3 பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இன்னும் 2 பாடல்கள் படத்திலேயே வெளியாகும் என்று கூறப்படுகிறது. அனிருத் தனது குரலில் பாடல்களைப் பாடி பலரது எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார். எல்லா பாடல்களையும் அவர் குரலிலேயே கேட்பது போரிங்காக இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

முதல் பத்து நிமிடங்கள்

லியோ திரைப்படத்தின் முதல் பத்து நிமிடங்களை யாரும் மிஸ் செய்துவிடக் கூடாது என ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. என்ன என்று விசாரித்தபோது காஷ்மீரில் கடும்பனியிலும் இரவு நேரங்களில் உறங்காமல் 1000 கணக்கானோர் உழைத்த அந்த காட்சிகள்தான் ஆரம்பத்தில் வர இருக்கிறதாம்.

வழக்கமான படங்கள் போலில்லாமல் விஜய் பெரிய பில்டப் எதுவும் இன்றி கமல்ஹாசனைப் போல சாதாரணமான இண்ட்ரோவுடன் அறிமுகமாகிறாராம். அவரும் கடுமையான குளிரைப் பொருட்படுத்தாது இரவு நேரத்தில் நடித்துள்ள காட்சிகள்தான் படத்தின் ஆரம்ப காட்சி என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து சாதனை

லியோ திரைப்படத்தின் ஓவர்சீஸ் காப்பிகள் 14ம் தேதியே சென்றடையும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டிருக்கிறார்களாம். வழக்கமாக 19ம் தேதி படம் வெளியாகிறது என்றால் 18ம் தேதி நள்ளிரவில்தான் சென்றடையும். அதுவரை படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு விநியோகஸ்தர்கள் இருப்பார்களாம். அதுபோன்ற சிரமங்களை ஓவர்சீஸ் விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கவேண்டாம் என லியோ படக்குழு இப்படி திட்டமிட்டிருக்கிறதாம்.

இதுமட்டுமின்றி ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா என உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் வெளியாகும் லியோ படத்துக்கான தணிக்கையையும் இப்போதே பெற்று தயாராக வைத்திருக்கிறார்களாம்.

லியோ திரைப்படம் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் பிரீமியர் ஷோக்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். அங்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் ஆன்லைன் புக்கிங் செய்து சாதனை படைத்துள்ளது. 

Tags:    

Similar News