Leo First single அப்டேட் வந்துடிச்சி! பாட்டு எப்படி இருக்கும் தெரியுமா?
தளபதி பிறந்தநாளுக்கு லியோ பர்ஸ்ட் பாட்டு ரிலீஸாகுதாம். நா ரெடினு துவங்குற பாட்டு சும்மா பட்டைய கிளப்ப போகுது.;
தளபதி விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22ம் தேதி வரவுள்ளதைத் தொடர்ந்து லியோ படத்திலிருந்து சூப்பர் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், லியோ படத்தின் முதல் பாடல் அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் தனது ஆஸ்தான நாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடித்த படம் விக்ரம். விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் இணைந்து நடித்த இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வசூலில் பட்டையைக் கிளப்பியது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, வட இந்தியா என அனைத்து இடங்களிலும் சக்கை போடு போட்டது. உலக அளவிலும் படம் திரையிடப்பட்டு வசூலை வாரிக் குவித்தது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒரு வெற்றியை கமல்ஹாசனுக்கு கொடுத்தது.
விக்ரம் பட வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய்யுடன் இணைந்தார். லியோ என்று பெயரிட்டுள்ள இந்த படத்தில், விஜய்யுடன், திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதம், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் இருக்கிறது. முதலில் சென்னையில் படப்பிடிப்பு ஓரிரு நாட்கள் நடைபெற்ற நிலையில், அடுத்து 60 நாள் ஷெட்யூலுக்காக காஷ்மீர் புறப்பட்டு சென்றது படக்குழு.
காஷ்மீரில் தொடர் படப்பிடிப்பு முடிந்த நிலையில், சென்னையில் இரண்டு பாகங்களாக இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட படப்பிடிப்பில் விஜய், திரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு நேற்று துவங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட 85 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த படத்தில் விக்ரம் படத்தின் கதாபாத்திரங்கள் பல வந்து செல்லும் வகையில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த படமும் எல்சியூவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் நடித்த மாயா லியோ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். நரேன், ஏஜன்ட் டினா கதாபாத்திரத்தில் நடித்த வசந்தி, கைதி படத்தில் நடித்த ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய்யின் பிறந்த மாதம் என்பதால் இந்த மாதத்தில் நிச்சயம் லியோ அப்டேட் கிடைக்கும் என்று ரசிகர்கள் காத்திருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த வகையில் வரும் ஜூன் 22ம் தேதி லியோ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நா ரெடி என்று துவங்கும் இந்த பாடலை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணு எடவன் எழுதியிருக்கிறார். இவர்தான் போர்க்கண்ட சிங்கம் பாடலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.