மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு

காஷ்மீரில் நடந்து வந்த லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து அங்கு எடுக்கப்பட்ட மேக்கிங் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

Update: 2023-03-23 17:15 GMT

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம்-2 படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்ஜய் தத், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார்.

இந்த படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வந்தது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது வெளியாகும் புகைப்படங்களால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் காத்துள்ளனர். மேலும் லியோ படத்தின் ப்ர்ஸ்ட் ப்ரொமோ வீடியோ ப்ளடி ஸ்வீட் என்று பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில் காஷ்மீரில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் காஷ்மீரில் நடந்த படப்பிடிப்பு தொடர்பான வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படக்குழுவினர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பணியில் ஈடுப்பட்டுள்ளது, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர்களுக்கு படக்காட்சிகளை விளக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

மேலும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து படக்குழுவினர் பேசுவது, நடிகர் விஜய் ஓடிவருவது போன்ற காட்சிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள எல்லை காவல் படையினருடன் நடிகர் விஜய் பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ வெளியானதில் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags:    

Similar News